- Advertisement -
Homeபொழுதுபோக்கு12 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் மதகஜராஜா... ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலகலப்பை தெளித்த சுந்தர்சி... ஒவ்வொரு...

12 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் மதகஜராஜா… ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலகலப்பை தெளித்த சுந்தர்சி… ஒவ்வொரு விஷயமும் கேட்க கேட்க எதிர்பார்ப்பை கூட்டுதே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மசாலா திரைப்படங்களை கொடுப்பதில் கிங்காக இருப்பவர் சுந்தர் சி. அவர் எடுக்கும் திரைப்படங்களில் லாஜிக் இருக்கிறதோ இல்லையோ, வலுவான கதை உள்ளதோ இல்லையோ கமர்சியல் எலமென்ட்களுக்கு மட்டும் என்றைக்கும் குறை இருக்கவே செய்யாது. அதிலும் நகைச்சுவை மிக தூக்கலாக இருப்பதால் சுந்தர் சி திரைப்படங்களுக்கென தனி மவுசு இங்கே இருக்கிறது.

 

- Advertisement -

ரஜினி கமல் என மூத்த நடிகர்களுடன் கைகோர்த்து விட்ட சுந்தர் சி, 2013 ஆம் ஆண்டு விஷாலுடன் இணைந்து பணியாற்றிய திரைப்படம் தான் மதகஜராஜா. இதில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்தனர். சந்தானம் பிரகாஷ்ராஜ் சோனு சூட் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறது.

 

- Advertisement -

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், மதகஜராஜா திரையரங்குகளில் மட்டும் வெளியாகாமலேயே இருந்து வந்தது. ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் பல்வேறு காரணங்களால் அது நடைபெறாமல் முடங்கியது. இப்படியே ஒன்றல்ல இரண்டல்ல பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

 

இப்படியான சூழலில்தான் தற்போது தனது இறக்கையை விட்டு பறக்க ஆரம்பித்திருக்கிறது மதகஜராஜா. பொங்கல் ரிலீஸ்க்கு விடாமுயற்சி தள்ளிப்போன நிலையில், அந்த ரேஸில் சுந்தர் சி படம் குதித்து இருக்கிறது. இந்த நிலையில் மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விஷால் இயக்குனர் சுந்தர் சி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

இதில் விஷால் மிகவும் உடல் மெலிந்த நிலையில் கை நடுக்கத்துடன் காட்சியளித்தார். கடும் காய்ச்சலில் அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாகவும் இதனாலையே அவர் கை நடுங்குவதாகவும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி, இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறியபோது பலரும் கிண்டலடிப்பார்கள் என்று நினைத்தேன் ஆனால் வரவேற்பு வேறு விதமாக உள்ளது.

 

80களில் வந்த திரைப்படம் போல் இதனை எடுத்து இருக்கிறோம். இதில் லாஜிக் எல்லாம் பார்க்காதீர்கள். நிச்சயம் இந்த திரைப்படம் உங்களை சந்தோஷப்படுத்தும். படத்தில் 15 நிமிட காட்சி ஒன்று இருக்கிறது அது உங்களை 100% சிரிக்க வைக்கும் என்றெல்லாம் பேசி இருக்கிறார். படத்தில் ஆர்யா கேமியோ ரோலில் வருவதாகவும் தெரிவித்தார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

 

- Advertisement -

சற்று முன்