- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை ஸ்ரீதேவி நடித்த கேரக்டரில்தான் கவின் நடித்திருக்கிறாரா? பிளடி பெக்கர் படம் குறித்து வெளியான சர்ச்சையான...

நடிகை ஸ்ரீதேவி நடித்த கேரக்டரில்தான் கவின் நடித்திருக்கிறாரா? பிளடி பெக்கர் படம் குறித்து வெளியான சர்ச்சையான தகவல் – கடைசியில் ரஜினி படத்தையே சுட்டுட்டாங்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகராக கவின் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெளிவந்த டாடா, லிப்ட், ஸ்டார் படங்களை தொடர்ந்து அடுத்ததாக பிளடி பெக்கர் என்ற படத்தில் கவின் நாயகனாக, பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருக்கிறார். வருகிற தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸாகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் தயாரிப்பில், அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவரது நண்பர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் உருவான படம்தான் பிளடி பெக்கர். இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. பிச்சைக்காரனாக இருக்கும் ஒருவன், பிரம்மாண்டமான அரண்மனைக்குள் சென்று, அங்கு 300 கோடி ரூபாய் சொத்துக்களை அடையத் துடிக்கும் சிலருக்காக போலியாக நடிக்கிறார். இதுதான் பிளடி பெக்கர் ட்ரெய்லர் மூலம் ரசிகர்கள் புரிந்து கொண்ட கதையாக உள்ளது.

- Advertisement -

இதுதான் படத்தின் கதையாக இருக்கும் பட்சத்தில் இது அடுத்த வாரிசு படத்தின் உல்டா கதை என தெரிய வந்துள்ளது. ராஜ பரம்பரை சொத்துகளை அபகரிக்க திட்டமிடும் சிலர், தெருத்தெருவாக நடனமாடி பிழைக்கும் ஒரு இளம் பெண்ணை, காணாமல் போன ராஜ வாரிசு என நடிக்க வைத்து சொத்துக்களை அடைய நினைக்கிறார்கள். இதுதான் அடுத்த வாரிசு படத்தின் கதை.

இயக்குனர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் இளையராஜா இசையில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சோ, மனோரமா, ரவீந்தர், செந்தாமரை, எஸ். வரலட்சுமி, விகே ராமசாமி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடித்த படம் அடுத்த பரிசு. இது கடந்த 1983ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியை பெற்றது. அடுத்து வாரிசு படத்தில் தெருவில் பிச்சை எடுத்துவிட்டு மாளிகைக்கு போன ஸ்ரீதேவி கேரக்டரும், ப்ளடி பெக்கர் படத்தில் தெருவில் பிச்சை எடுத்துவிட்டு மாளிகைக்கு போகும் கவின் கேரக்டரும் ஒன்றுதான் எனத் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அடுத்த வாரிசு படம், அதற்கு முன் 1972ம் ஆண்டில் வெளிவந்த இந்தி படமான ராஜா ஜானி என்ற படத்தின் ரீமேக் தான். அந்த இந்தி படம், அதற்கு முன் 1956ம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் படமான ஸ்டார் என்ற படத்தின் தழுவல்தான் என்றும் தெரிய வந்துள்ளது. அதேபோல் பிளடி பெக்கர் படம் 2019ம் ஆண்டில் வெளிவந்த ரெடி ஆர் நாட் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலாகவும் இருக்கலாம் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த வாரிசு படத்தை ஜெய்ப்பூர் அரண்மனை ஒன்றில் படமாக்கி இருந்தனர். அதே போல் பிளடி பெக்கர் படத்தில் வரும் பல காட்சிகள் மைசூரில் உள்ள லலித மஹால் பேலஸ்சில் எடுக்கப்பட்டது என்றும் தெரிய வந்துள்ளது. பிளடி பெக்கர் படம் வெளிவந்த பின்புதான், இதில் எந்த படத்தில் இருந்து இந்த படத்தை உருவி எடுத்துள்ளார்கள் என்பது தெரிய வரும். இதுகுறித்து இப்போதே ரசிகர்கள் கலாய்க்க துவங்கி விட்டார்கள். ரஜினி படத்தையும் சுட்டுட்டாங்களா என்றும் விமர்சித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்