- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா - ஆர் ஜே பாலாஜி இணையும் திரைப்படத்திற்கு டைட்டில் இதுதானா... நாயகருடன் சேர்ந்து...

சூர்யா – ஆர் ஜே பாலாஜி இணையும் திரைப்படத்திற்கு டைட்டில் இதுதானா… நாயகருடன் சேர்ந்து டூயட் பாடப்போகும் நாயகி யார் தெரியுமா… போடு தகிட தகிட…

- Advertisement -

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது தீவிரம் காட்டப்பட்டுள்ளன. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த திரைப்படம், 300 கோடி ரூபாய்க்கு அதிகமான செலவில் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

 

- Advertisement -

முந்தைய ஜென்மம் மற்றும் தற்போதைய சூழலை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை கனெக்ட் செய்து எடுத்திருக்கிறார் சிறுத்தை சிவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தின் வசூல் 2000 கோடி அளவில் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அண்மையில் அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது பலரையும் புருவத்தை உயர்த்த செய்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, சுதா கொங்கராவுடன் தான் சூர்யா இணைய இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அது நடைபெறாமல் போனது.

 

இதனைத் தொடர்ந்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் கை கொடுத்த சூர்யா, விறுவிறுப்பாக நடைபெற்ற படத்தின் பணிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். ஜூலை மாதம் ஆரம்பித்த படப்பிடிப்பை, கடந்த சில நாட்களுக்கு முன்பு முடித்து அசத்தினார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

 

கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக இந்த திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகளும் விறுவிறுப்படைந்துள்ளன. இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத வகையில் ஆர் ஜே பாலாஜியுடன் சூர்யா இணைந்திருக்கிறார்.

 

இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. ட்ரீ வாரியர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதில், அரிவாள் நிறைந்த புகைப்படம் இடம் பெற்றிருந்ததால் இது கிராமத்துக் கதையாக இருக்கக்கூடும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். படத்திற்கு கருப்பு என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக காஷ்மிரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே பிடி சார் மற்றும் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

சற்று முன்