- Advertisement -
Homeபொழுதுபோக்குவருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படம் விரைவில் அறிவிப்பு, சிவகார்த்திகேயனுக்கு பதிலா ஹீரோ இவரா? -...

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 படம் விரைவில் அறிவிப்பு, சிவகார்த்திகேயனுக்கு பதிலா ஹீரோ இவரா? – போடு வெடிய, தரமான சம்பவம்தான்!

- Advertisement -

விஜய் டிவியில் அது இது எது காமெடி ஷோ தொகுப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். பிறகு சினிமா விழாக்களையும், விருது விழாக்களையும் தொகுத்து வழங்கிய காம்பியர்களில் ஒருவராக மேடையில் இருந்தார். நடிகர், நடிகைகளை நேர்காணல் செய்தார். அந்த வகையில் இயக்குனர் பாண்டிராஜ், தனுஷூடன் அவருக்கு நல்ல பரிச்சயம் ஏற்பட்டது.

இதையடுத்து மெரினா என்ற படத்தில் சிவகார்த்திகேயனை, இயக்குனர் பாண்டிராஜ் அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில், அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல் போன்ற படங்களில் சிவகார்த்திகேயனின் நடிப்பு ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது.

இந்நிலையில், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்தார். இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில், மிக முக்கியமான படமாக அமைந்தது. இதில் சூரி, சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, ஸ்ரீரஞ்சனி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றிப் படமாக சிவகார்த்திகேயனுக்கு அமைந்தது.

இந்த படத்துக்கு டி இமான் இசையமைத்து இருந்தார். ஊரை காக்க உருவான சங்கம், பார்க்காத பார்க்காத உள்ளிட்ட பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் – சூரி காமெடி கூட்டணி படத்துக்கு பெரிய பலத்தை கொடுத்தது. சத்யராஜின் வில்லத்தனமான நடிப்பும் ரசிக்க வைத்தது.

இப்படி ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த வெற்றிப் படமாக வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2ம் பாகமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை மீண்டும் இயக்குனர் பொன்ராம் இயக்க அதிக வாய்ப்புள்ளது. படத்தில் நடிக்க வேண்டிய நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.

ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2ம் பாகத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக, இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் கவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாடா, லிப்ட் படங்களை தொடர்ந்து கவின் நடிப்பில் இப்போது ஸ்டார் படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்த படத்தில் ஹீரோவாக கவின் கமிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

சற்று முன்