- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் அந்த நடிகர்களை போல ஸ்டார் ஆக வேண்டும் என்று சின்ன வயதிலேயே ஆசைப்பட்டவன் நான்...

சினிமாவில் அந்த நடிகர்களை போல ஸ்டார் ஆக வேண்டும் என்று சின்ன வயதிலேயே ஆசைப்பட்டவன் நான் – லெஜண்ட் சரவணன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி என அழைக்கப்பட்டவர் அருள் சரவணன். தொழிலதிபராக உள்ள அவர் முதலில் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமானார். தொடர்ந்து சினிமாவிலும் அவர் நடிக்க ஆர்வம் காட்டினார். அருள் சரவணன் நடித்த முதல் படம் லெஜண்ட்.

அந்த படத்துக்கு பிறகு அவர் லெஜண்ட் சரவணன் என்றே ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். லெஜண்ட் படத்தை அடுத்து அவர் நடித்த புதிய படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் லெஜண்ட் சரவணன் நடித்த படத்திற்கு லீடர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து லீடர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

- Advertisement -

அந்த விழாவில் பேசிய நடிகர் லெஜண்ட் சரவணன் கூறியதாவது, ஜவுளி மற்றும் சினிமா ஆகிய இரண்டு தொழில்களிலும் நான் முதல் ஆளாக வந்து கடைசி ஆளாக செல்வேன். எந்த வேலையாக இருந்தாலும் அதில் என் முழு திறமையையும் வெளிப்படுத்துவேன்.

லீடர் என்ற தலைப்பை பார்த்ததும் இது ஒரு அரசியல் படமா என்று பலருக்கும் கேள்வி எழலாம். ஆனால் இது ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. ஒரு அப்பாவி தந்தையும் மகளும் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் ஒரு கும்பல் அவர்களின் வாழ்க்கையில் குறுக்கீடு செய்கிறது.

- Advertisement -

இதுதான் இந்த படத்தின் கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் தனது திரைக்கதையால் இதை சிறப்பாக செதுக்கியுள்ளார். இந்த கதை இந்த தலைமுறைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். சின்ன வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது ரொம்பவும் ஆர்வம் இருந்தது.

என்னுடைய வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் இரண்டு பக்கங்களிலும் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் புகைப்படங்களை ஒட்டி வைத்திருப்பேன். ஒருநாள் நானும் இவர்களைப் போல பெரிய ஸ்டார் நடிகராக ஆவேன் என்று என் அம்மாவிடம் அடிக்கடி சொல்லுவேன். ஆனால் துரதிஷ்டவசமாக நான் என் தந்தையின் தொழிலை கவனிக்க வேண்டியதாகி விட்டது என்று லெஜண்ட் சரவணன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்