- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவ்வளவு பெரிய நட்சத்திர நடிகர் இதுதான் சாப்பிடுகிறாரா? காலை உணவு எப்போதும் இதுதானா? -...

இவ்வளவு பெரிய நட்சத்திர நடிகர் இதுதான் சாப்பிடுகிறாரா? காலை உணவு எப்போதும் இதுதானா? – தனது உடல் ஆரோக்கியம் குறித்து நடிகர் மாதவன் பகிர்ந்த ரகசியம்!

- Advertisement -

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆனால் நாம் சாப்பிடும் உணவுக்கு கட்டாயம் பொருந்தும். ஏனென்றால் உணவு மட்டும் சரியாக அளவாக சத்தாக ஆரோக்கியமாக இருந்து விட்டால் உடல் சார்ந்த பல நோய் பாதிப்புகளை நாம் மிக எளிதாக தவிர்த்து விட முடியும்.

ஆனால் நம்மில் பலருக்கு உணவு மீதான தீராத ஆசையும் ருசிக்கு அடிமையான நாக்கும்தான் பலவிதமான உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட வைத்து ஒரு கட்டத்தில் அதுவே உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அளவுக்கு போய் விடுகிறது. அதனால் உணவு விஷயத்தில் சினிமா நடிகர்கள் மட்டுமின்றி அனைவருமே விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம்.

- Advertisement -

அந்த வகையில் மூத்த கலைஞர் நடிகர் சிவக்குமார் உணவு பழக்கம் குறித்தும் உடல் ஆரோக்கியம் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறது. டீ காஃபி போன்றவையே உடல் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய கேடு என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். 80 வயதுகளை கடந்தும் அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் மாதவனும் தனது உடல் ஆரோக்கியம் குறித்து ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். தற்போது அவரது நடிப்பில் ஜிடிஎன் என்ற படம் வெளியாகி உள்ளது. கோவையை சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படமாக அது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஜிடி நாயுடுவாக மாதவன் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகர் மாதவன் கூறியதாவது, கஞ்சி தான் எப்போதும் என்னோட காலை உணவு. முந்தின நாள் நைட்டில் ஊற வைத்த சாதத்தில் காலையில் கொஞ்சம் தயிர் கொஞ்சம் பச்சை மிளகாய் கொஞ்சம் பொடியாக நறுக்கின சின்ன வெங்காயம் கலந்து குடிக்கும் போது அமிர்தமாக இருக்கும்.

உடம்புக்கு குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் திருப்தியாக சாப்பிடவும் அது அமிர்தமாக இருக்கும். ரொம்ப காலமாக என்னுடைய காலை உணவு இதுதான் என்று நடிகர் மாதவன் அந்த நேர்காணலில் பெருமிதமாக கூறியிருக்கிறார். நடிகர் சிவக்குமார் கடந்த பல ஆண்டுகளாகவே காலை உணவாக ஒரு கைபிடி பழைய சாதம் சின்ன வெங்காயம் காம்பினேஷனில் சாப்பிட்டு வருவதாக கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்