- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் மாதவனுக்கு வாழ்க்கையில் இப்படி ஒரு ஏமாற்றமா? - சின்ன வயசுல ஆசைப்பட்டதுதான் நடக்கலே, இப்பவும்...

நடிகர் மாதவனுக்கு வாழ்க்கையில் இப்படி ஒரு ஏமாற்றமா? – சின்ன வயசுல ஆசைப்பட்டதுதான் நடக்கலே, இப்பவும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே, என்ன கொடுமை சார் இது?

- Advertisement -

மேடி என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் மாதவன். மின்னலே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். லிங்குசாமி இயக்கத்தில் நடித்த ரன் படம் இவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார்.

அலைபாயுதே, அன்பே சிவம், நளதமயந்தி, டும்டும்டும், பிரியமான தோழி, மன்மதன் அன்பு, விக்ரம் வேதா, வேட்டை, இறுதிச்சுற்று போன்ற பல படங்கள் நடித்த நிலையில், கமலுடன் நடித்த அன்பே சிவம் படத்தில் அதிகமாக பேசப்பட்டார். விஜய்சேதுபதி, ஆர்யா போன்ற பிற ஹீரோக்களுடனும் மாதவன் நடித்தார். அந்த படங்களும் வெற்றி படங்களாக அமைந்தது.

தமிழில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் மாதவன் கால்பதித்தார். அவர் நடித்து, டைரக்ட் செய்த படம் ராக்கெட்டரி. கடந்தாண்டு வெளியான இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்ட வெற்றிப்படமாக அமைந்தது. மாதவனுக்கு பல விருதுகளை பெற்றுத் தந்தது.

நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாயாக இருந்த மாதவன், இப்போது 53 வயதில் இருக்கிறார். எனினும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் இப்போதும் அவரது படங்களை விரும்பி ரசிக்கிறது. தமிழில் நடிக்கும் வாய்ப்புகள் குறைந்த நிலையில் இந்தியில் அதிக ஆர்வம் காட்ட துவங்கினார் மாதவன். ராக்கெட்டரி படம் வெற்றி பெற்ற நிலையில் இந்தியில் படங்களில் மட்டுமின்றி, வெப் சிரீஸ் வாய்ப்புகளும் மாதவனுக்கு அதிகமாக வருகிறது.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, இளம் வயதில் மாதவன் இருந்த போது கொயமேட் சே கொயமேட் டக் என்ற படத்தை பார்த்திருக்கிறார். அப்போது அந்த படத்தில் நடித்திருந்த ஜூஹி சாவ்லாவை மாதவனுக்கு மிகவம் பிடித்துப் போய்விட்டது. அதனால் அவரை தான் நான் திருமணம் செய்துக்கொள்வேன் என, தன் அம்மாவிடம் ஆசையாக கூறி இருக்கிறார்.

இப்போது தி ரயில்வே மேன் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் மாதவன் நடிக்கிறார். அந்த சீரிஸ்சில் நடிகை ஜூஹி சாவ்லாவும் நடிக்கிறார். ஆனால், ஒரே சீரிஸ்சில் இருவரும் நடித்தும் மாதவனும் ஜூஹி சாவ்லாவும் ஒன்றாக நடிக்கும்படியாக அதில் காட்சிகள் இல்லை. அதனால், இருவரும் ஒரே சீரிஸ்சில் நடித்தும் அவரை நான் நேரில் பார்க்க முடியவில்லை என்று ஆதங்கப்பட்டு நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார் மாதவன்.

சற்று முன்