- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் உடன் இரண்டாவது முறையாக இணையும் மாரி செல்வராஜ்... இந்த முறை ஷூட்டிங் திருநெல்வேலியிலோ, தூத்துக்குடியிலோ...

தனுஷ் உடன் இரண்டாவது முறையாக இணையும் மாரி செல்வராஜ்… இந்த முறை ஷூட்டிங் திருநெல்வேலியிலோ, தூத்துக்குடியிலோ இல்லையாம்… அப்படின்னா வேற எங்க தெரியுமா…

- Advertisement -

சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக கதைக்களம் அமைத்து அதில் சமூக நீதியை உரக்கச் சொல்லும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் திரைப்படம் ஆன பரியேறும் பெருமாளிலேயே, தான் யார் என்பதையும், தனது பின்புலம் என்ன என்பதையும் மிகவும் அழுத்தமாகக் காட்டி இருந்தார் இயக்குனர்.

இத்தனை வருடங்களில் தமிழ் சினிமா ஏராளமான திரைப்படங்களை கடந்து வந்தாலும் அதில் நிச்சயமாக பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு என ஒரு தனி இடம் இருக்கும். அந்த அளவுக்கு அந்தப் படத்தை மாரி செல்வராஜ் செம்மைப்படுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனுஷ் உடன் கர்ணன் திரைப்படத்தில் இணைந்து பட்டையை கிளப்பினார்.

- Advertisement -

ஒரு கிராமத்திற்குள் பேருந்து வரப்படாததையும், அதற்குப் பின்னால் இருக்கும் சாதிய அரசியலையும் தோலுரித்து காட்டியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். அதிலும் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரது மனதையும் உலுக்கியது. கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை ருசிக்க, ஆகப்பெரும் இயக்குனராக உருமாறினார் மாரி செல்வராஜ்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருந்த அவர், உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வாழை என்னும் காவியத்தையும் கொடுத்தார். இந்த திரைப்படங்களுமே வசூலில் பட்டையை கிளப்பின. தற்போது மாரி செல்வராஜ், பைசன் என்கிற காளமாடன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகன்.

- Advertisement -

கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், கலையரசன், அழகம்பெருமாள், அருவி மதன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நெல்லை மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. வரும் தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக, தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ். அவர் எடுத்த திரைப்படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் படம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், படப்பிடிப்பும் ஜப்பானில் நடைபெற இருப்பதாக தகவல் கசிந்துள்ளன. அண்மையில் தனது குடும்பத்தினருடன் அங்கு சுற்றுலா சென்ற மாரி செல்வராஜ், தனுஷ் படத்திற்கான லொக்கேஷனையும் தேர்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்