- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் செய்ற அந்த விஷயத்தை தமிழ் சினிமா ஹீரோக்கள் பண்றது இல்லே - விழா மேடை...

நான் செய்ற அந்த விஷயத்தை தமிழ் சினிமா ஹீரோக்கள் பண்றது இல்லே – விழா மேடை ஒன்றில் உண்மையை சொல்லி ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் மம்முட்டி!

- Advertisement -

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுவர் நடிகர் மம்முட்டி. தமிழிலும் பல படங்களில் அவர் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார். மம்முட்டி நடித்த ஆனந்தம், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, எதிரும் புதிரும் மறுமலர்ச்சி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தன.

தற்போது 70 வயது கடந்த நிலையிலும், நடிகர் மம்முட்டி சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அவரது சீனியாரிட்டிக்கு ஏற்ப நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார். குறிப்பாக 74 வயதிலும் ஹீரோயிசம் காட்டி பில்டப் செய்யும் தமிழ் சினிமா நடிகர் ரஜினிகாந்த் போல அவர் எப்போதும் நடிப்பதில்லை.

- Advertisement -

நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் ஒரு சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான லக்கி பாஸ்கர் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று, வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தை பெரிய அளவில் நடிப்பில் கவுரவப்படுத்தி வருகிறார் துல்கர் சல்மான் என்பது பாராட்டுக்குரியது.

நடிகர் மம்முட்டியை பொருத்த வரை, மலையாளத்தில் பெரிய நடிகராக இருந்தாலும் இயல்பில் மிக சாதாரணமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்பவர். எந்த இடத்திலும் தனது புகழை பிரதிபலிக்க விரும்பாமல் ஒரு கலைஞனாக மட்டுமே தன் இருப்பை அவர் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விருது வழங்கும் விழா மேடை ஒன்றில் பேசிய நடிகர் மம்முட்டி கூறியதாவது, பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன். 96 படம் பார்த்தேன். அப்புறம் கோலமாவு கோகிலா பார்த்தேன். காலா கபாலி எல்லாமே பார்த்தேன். சர்கார் படம் பார்த்தேன். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ நடிகர்கள் நடிச்ச எல்லா படங்களையும் நான் பார்க்கிறேன்.

ஆனால் இந்த ஹீரோக்கள் எல்லாம் நான் நடித்த படங்களை பார்ப்பது இல்லை. இப்ப போய் அவர்களிடம் கேட்டால், சார் உங்க படங்களை பார்த்தது இல்லை சார். ஆனா அந்த படம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் என்று மட்டும் சொல்வார்கள். அதனால் என்ன, பரவாயில்லை என்று வெளிப்படையாக தன் ஆதங்கத்தை கூறியிருக்கிறார் நடிகர் மம்முட்டி. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்