- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பா ரஞ்சித்திடம் நான் கற்றுக்கொண்ட பாடம்… ஓபனாக பேசிய நடிகர் மணிகண்டன் - இது...

இயக்குனர் பா ரஞ்சித்திடம் நான் கற்றுக்கொண்ட பாடம்… ஓபனாக பேசிய நடிகர் மணிகண்டன் – இது நல்ல பாலிஸியா இருக்குதே ப்ரோ…?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது வளரும் நடிகராக இருப்பவர் மணிகண்டன். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து இப்போது மக்கள் காவலன் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராக சினிமாவில் தனது பயணத்தை துவங்கிய மணிகண்டன் ஸ்கிரிப் ரைட்டர் உதவி இயக்குனர் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பன்முக தன்மை கொண்ட ஒரு சிறந்த கலைஞராக இருக்கிறார். காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்து பெரிய வரவேற்பை பெற்ற மணிகண்டன் நல்ல இளம் நடிகராக சிறந்த படங்களை ரசிகர்களுக்கு தந்து வருகிறார்.

- Advertisement -

கமர்ஷியல் நடிகராக பெரிய அளவில் நடித்து பல கோடி ரூபாய்களில் சம்பளம் பெற துடிக்கும் இன்றைய இளம் நடிகர்களுக்கு மத்தியில், நல்ல கதைகளில் சிறந்த அழுத்தமான கேரக்டர்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் சிறந்த படங்களை தேர்வு செய்து நடிகர் மணிகண்டன் நடித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்பீம் படத்தில் இவரது நடிப்பு பலத்த பாராட்டை பெற்றிருந்தது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மணிகண்டன் கூறியதாவது, இயக்குனர் பா ரஞ்சித் அண்ணன் சமீபத்தில் ஒரு படம் பண்ணினார். அந்த படம் சரியாக போகவில்லை. எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் அந்த படத்துக்காக பார்ட்டி பண்ணினார். எல்லாரும் அதில் கலந்துக்கிட்டாங்க. டின்னர் எல்லாம் கொடுத்தார்.

- Advertisement -

நான் அவரிடம், இதுபற்றி கேட்டேன். அண்ணா அந்த படம் சரியாக போகலே, என்றேன், ஆமாம்பா படம் நஷ்டம்தான் என்றார். அப்புறம் ஏண்ணே, எதுக்கண்ணா இப்படி பார்ட்டி தரணும் என்று வெளிப்படையாக கேட்டேன். அது நல்ல படம்பா, நல்ல படம் கொடுத்திருக்கோம். அதுக்குதான் பார்ட்டி என்றார்.

அந்த ஆடிட்யூட்டை நான் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு மோசமான சினிமாவை எடுத்து கூட நிறைய காசு சம்பாதித்து விடலாம். அதே நேரத்துல நல்ல படம் கொடுத்துட்டு தோத்தே போனாலும் பரவாயில்லை. எனக்கு அது ஓகே தான் என்று இயக்குனர் மணிகண்டன் கூறியிருக்கிறார். நடிகர் மணிகண்டன் சுட்டிக்காட்டிய பா ரஞ்சித் இயக்கிய படம் தங்கலான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்