- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷூக்கு நோ சொன்ன நெல்சன்… சிம்புவுக்கு ஓகே சொன்னது எப்படி? கிளம்பியது பெரிய பஞ்சாயத்து -...

தனுஷூக்கு நோ சொன்ன நெல்சன்… சிம்புவுக்கு ஓகே சொன்னது எப்படி? கிளம்பியது பெரிய பஞ்சாயத்து – பின்னால இப்படி ஒரு காரணமா…?

- Advertisement -

விடுதலை 2 படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் டைரக்ட் செய்யும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இந்த படம் வடசென்னை படத்தின் 2ம் பாகமாக இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் இது தனுஷ் நடிக்க வேண்டிய வடசென்னை 2ம் பாகம் அல்ல, வேறு கிளை கதையில் உருவாகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் பிரமோ ஷூட் சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள போலீஸ் மியூசியத்தில் நடந்தது. 2 நாட்கள் நடந்த இந்த பிரமோ ஷூட்டிங்கில் இயக்குனர் நெல்சனும் பங்கேற்று நடித்தார். இந்த படத்தில் நெல்சன் சில காட்சிகளில் இயக்குனர் கேரக்டரிலேயே வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் பிரமோவுக்காக மட்டுமே அவர் நடிப்பதாகவும் முதலில் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் இப்போதைய நிலவரப்படி நெல்சன் இந்த படத்தில் ஒரு கேரக்டராகவே வருகிறார். இதற்காக அவர் இயக்குனர் வெற்றிமாறனுக்கு 10 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி தந்திருக்கிறார். ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் பாதிக்காத வகையில், இடையில் 10 நாட்கள் இந்த படத்தில் நடித்து கொடுக்கவும் நெல்சன் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

அதனால் சிம்பு நடிக்கும் படத்தில் இயக்குனராக வரும் நெல்சனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் மற்றொரு பஞ்சாயத்தும் இதில் கிளம்பியிருக்கிறது. அதாவது இட்லி கடை படத்தை இயக்கிய நடிகர் தனுஷ், படம் துவங்கிய சில தினங்களில் இயக்குனர் நெல்சனை தனது படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்.

- Advertisement -

ஆனால் ஸாரி பாஸ், இப்போதுதான் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்கான பணிகளை துவங்கியிருக்கிறேன். நிச்சயமாக முடியாது என தனுஷூக்கு நெல்சன் மறுப்பு தெரிவித்து விட்டார். இப்போது சிம்பு நடிக்கும் படம், வெற்றி மாறன் இயக்கம் என்றவுடன் இந்த படத்தில் நடிக்க உடனே ஓகே சொல்லி, படப்பிடிப்புக்கும் வந்துவிட்டார் நெல்சன்.

இதற்கு பின்னால் மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. இயக்குனர் நெல்சன் முதன்முறையாக சிம்பு நடித்த வேட்டை மன்னன் என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் அந்த படம் பாதியில் டிராப் ஆகிவிட்டது. அதே நேரத்தில் முதன் முதலாக இயக்குனராக தன்னை ஏற்றுக்கொண்டவர் சிம்புதான் என்ற நிலையில், நெல்சனுக்கும் சிம்புவுக்கும் நல்ல ஆழமான நட்பு உண்டு. அதனால்தான் கேட்டவுடன் நெல்சன் ஓகே சொல்லிவிட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்