தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் மணிகண்டன். தொடர்ந்து நல்ல கதைகளை, சிறந்த கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் படம் மாபெரும் வெற்றியை வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மணிகண்டன் ஆரம்பத்தில் இருந்தே சிறந்த கலைஞராக தன்னை உருவாக்கி கொண்டவர். டப்பிங் ரைட்டர் ஸ்கிரிப்ட் ரைட்டர் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் உதவி இயக்குனர் என பல முகங்கள் இவருக்கு உண்டு. காதலும் கடந்து போகும் இந்தியா பாகிஸ்தான் நெற்றிக்கண் ஏலே உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
அந்த வகையில் ரஜினிகாந்த் மகனாக நடித்த காலா படம் பெரிய கவனிப்பை ரசிகர்களிடம் மணிகண்டனுக்கு பெற்றுத் தந்தது. பிறகு ஜெய்பீம் படத்தில் ராஜாக்கண்ணு கேரக்டரில் நடிப்பில் வெற லெவல் காட்டியிருந்தார். குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் என ஹாட்ரிக் வெற்றிப் படங்களை தந்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் மணிகண்டனிடம், சினிமா பயணம் சிரமமாக உள்ளதா, என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் மணிகண்டன், சினிமாவில் என்னுடைய பயணம் எனக்கு சிரமமாக இல்லை. ஆனால் அதே நேரத்தில் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இந்த இடத்திற்கு எல்லாம் நீங்க வருவீங்கள் என்று எதிர்பார்த்தீர்களா என்று கேட்டால், ஆமாம் நான் எதிர்பார்த்தேன் என்பது தான் உண்மை. எல்லோருக்கும் ஷாருக்கான் மாதிரி ஆகணும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் ஷாருக்கான் மாதிரி ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று என்பது தெரிந்திருக்க வேண்டும். அதுதான் எனக்கு பயமா இருக்கு.
பிடித்த வேலையை செய்வதற்கு இங்கு சம்பளமும் கொடுக்கிறார்கள். அதை பாராட்டி விருதும் கொடுக்கிறாங்க. அப்புறம் எப்படி இந்த பயணம் சிரமமாகும். கண்டிப்பாக இல்லை என்று நடிகர் மணிகண்டன் அந்த விழாவில் பேசியிருக்கிறார். வழக்கமாக நடிகர் கமல்ஹாசதான் பிடிச்ச வேலையை செய்ய சினிமாவில் நிறைய சம்பளமும் தர்றாங்க, விருதும் கொடுத்து பாராட்டறாங்க என்று கூறுவார். இப்போது அதே டயலாக்கை நடிகர் மணிகண்டனும் பேசியிருக்கிறார்.





