தமிழ் சினிமாவில் இளம் நாயகர்களாக நடிக்க வருபவர்களில் பலரும் நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என சினிமா சார்ந்தவர்களின் மகன்களாக, மகள்களாக பெரும்பாலும் இருக்கின்றனர். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து சினிபீல்டில் நிலைத்து நிற்க முடிகிறது. திறமை இல்லாதவர்கள், சில படங்களிலேயே காணாமல் போய் விடுகின்றனர்.
கலைவாரிசுகளாக சினிமாவுக்குள் வந்து ஜெயித்தவர்கள் சிலருண்டு. அதே நேரத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் போனவர்கள் நிறைய பேர் உண்டு. அதே நேரத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் ஜெயித்த இளம் நடிகர்களும் உண்டு. அவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் மணிகண்டன்.
காலா ஜெயபீம் லவ்வர் குட்நைட் காதலும் கடந்து போகும் ஏலே உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். இதில் ரஜினி மகனாக காலா படத்தில் மணிகண்டன் நடிப்பு வேற லெவலில் இருக்கும். அதே போல் ஜெய்பீம் படத்தில் மணிகண்டன் நடிப்பு, தரமாக இருக்கும். குட்நைட் படத்தில் மோட்டார் மோகன் கேரக்டரில் ரசிகர்களின் மனதில் நின்றார் மணிகண்டன். அடுத்து குடும்பஸ்தன் என்ற அவரது படம் வெளிவர இருக்கிறது. நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் மணிகண்டனுக்கு பல தயாரிப்பாளர்கள், பல இயக்குனர்கள் அணுகி, தங்களது படங்களில் நடிக்க கமிட் செய்ய விரும்புகின்றனர். ஆனால் அப்படி தன்னை அணுகுபவர்களிடம் ஏற்கனவே சில கமிட்மெண்டுகளில் இருப்பதால் உங்களது படங்களில் இப்போதைக்கு நடிக்க முடியாது என்று மணிகண்டன் மறுத்து வருகிறார்.
இதற்கு காரணம், சினிமா பயணத்தில் தனது ஆரம்பகாலத்தில் தனக்கு வாய்ப்பளித்தவர்களையும், ஏணியில் ஏற்றிவிடுவது போல் உதவியவர்களையும் மறக்காத மணிகண்டன், அவர்களது படங்களில் நடிக்க கால்ஷீட் தந்து வருகிறார். அந்த வகையில் ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களை இயக்கிய இயக்கனர் தியாகராஜன் குமார ராஜா இயக்கும் படத்தில் இப்போது கமிட் ஆகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நன்றி மறக்காதவர், தனக்கு உதவியவர்களுக்கு மறக்காமல் உதவும் கொண்ட நடிகர் விஜய் சேதுபதிதான். அதே பாணியில் நடிகர் மணிகண்டனும் நன்றி மறக்காதவராக இருப்பதால், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு விஜய் சேதுபதி என்று மணிகண்டனும் பலரும் பாராட்டுகின்றனர். பழசை மறக்காத அவரது பண்பு, அவருக்கு இப்படி ஒரு பாராட்டை கோலிவுட்டில் பெற்று தந்திருக்கிறது.





