- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விருது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கு சொந்தமானது - 3வது முறையாக தேசிய விருது பெறும்...

இந்த விருது எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கு சொந்தமானது – 3வது முறையாக தேசிய விருது பெறும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் பெருமிதம்!

- Advertisement -

இந்திய தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 1954ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 72வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று மாலை டெல்லியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் அமரன் திரைப்படம் சிறந்த இயக்குனர் சிறந்த பின்னணி இசை சிறந்த படத்தொகுப்பு என்ற 3 பிரிவுகளில் தேசிய விருதுகளை கைப்பற்றியுள்ளது.

அமரன் திரைப்படத்திற்கு பின்னணி இசை அமைத்த இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் தேசிய விருது பெறுகிறார். இது அவரது சினிமா பயணத்தில் கிடைக்கும் 3வது தேசிய விருதாக உள்ளது. இதற்கு முன்பு சூரரை போற்று, வாத்தி ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெற்றார். தற்போது அமரன் திரைப்படத்திற்காக 3வது முறையாக ஜீவி பிரகாஷ் குமார் தேசிய விருது பெற உள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, 3வது முறையாக கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். அமரன் திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான 72வது தேசிய திரைப்பட விருதை பெறுவது எனக்கு மிகுந்த பணிவையும் அளவற்ற நன்றி உணர்வையும் அளிக்கிறது. 3வது முறையாக இந்த உயரிய விருதை பெறுவது எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். இந்த அங்கீகாரத்தை மனமார்ந்த நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த அற்புதமான அங்கீகாரத்தை வழங்கிய மதிப்பிற்குரிய நடுவர்கள் மற்றும் தேர்வு குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்த அழகான திரைப்படத்தில் என்னை நம்பி இசையமைக்கும் வாய்ப்பை வழங்கிய எங்கள் தயாரிப்பாளர் கமலஹாசன் அவர்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள். இந்த மறக்க முடியாத பயணம் முழுவதும் உறுதுணையாக இருந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன் சாய் பல்லவி மற்றும் அமரன் திரைப்படத்தின் அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

- Advertisement -

இவ்வளவு திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமையாக உள்ளது. இந்த இசைக்கு உயிர் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த எனது ஒலி பொறியாளர் ஜெஹோவாசன் அவர்களுக்கு நன்றி. அவருடைய அர்பணிப்பும் கடின உழைப்பும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த அங்கீகாரத்தை எனது அன்பான குடும்பத்தினர் என்னுடன் பயணித்து அற்புதமான இசை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் எனது நண்பர்கள் எனது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் துணையாக இருந்து அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக எனது ரசிகர்களுக்கும் நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பு தொடர்ந்த ஊக்கம் மற்றும் முடிவில்லா நம்பிக்கையை எனக்கு மிகப்பெரிய பலமும் உத்வேகமும் ஆகும். நான் உருவாக்கும் ஒவ்வொரு இசைக் குறிப்பும் உங்களுக்காகவே அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த விருது எனக்கு மட்டுமல்ல உங்களில் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது என்று ஜீவி பிரகாஷ் குமார் அதில் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்