- Advertisement -
Homeபொழுதுபோக்குதனக்கு அடையாளம் தந்த இயக்குனர் பெயரை விக்ரம் கவனமாக தவிர்த்தது சரியா? - தங்கலான் பட...

தனக்கு அடையாளம் தந்த இயக்குனர் பெயரை விக்ரம் கவனமாக தவிர்த்தது சரியா? – தங்கலான் பட விழாவில் எழுந்த புது சர்ச்சை

- Advertisement -

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். நடிப்பில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியான அதிகமாக மெனக்கெடுவது, உடலை வருத்திக்கொள்ளும் ஒரே நடிகர் விக்ரம் மட்டும்தான். நடிப்பில் எந்த குறையுமே சொல்ல முடியாத அளவுக்கு 100 சதவீதம் முழுமையான நடிப்பை தரும் அற்புத கலைஞன்.

ஆனால் சினிமாவில் ஆரம்ப காலத்தில் விக்ரமுக்கு சரியான வாய்ப்புகள் இல்லை. பல படங்களில் துணை நடிகராகவும் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணி செய்திருக்கிறார். ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு பின்னணி பேசியது விக்ரம்தான்.

- Advertisement -

அதே விக்ரம் பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன், ஐ படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் விக்ரமுக்கு சியான் விக்ரம் வரக் காரணமும், சினிமாவில் அவருக்கு ஒரு பெரிய நடிகராக அங்கீகாரம் கிடைத்ததும் இயக்குனர் பாலா இயக்கிய சேது படம் மூலமாக தான்.

சேது படம் மட்டும் விக்ரம் நடிக்காமல் இருந்திருந்தால், அவருக்கான அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம்தான். அதே நேரத்தில் சேது படத்தில் விக்ரம் நடிப்பு எக்ஸ்ட்ரானரியாக இருந்ததையும் யாரும் மறுக்க முடியாது. அதே போல் பாலா இயக்கத்தில் விக்ரமுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம் பிதாமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் நேற்று சென்னையில் நடந்த தங்கலான் பட விழாவில் பேசிய நடிகர் விக்ரம், ஒரு நடிகராக தனது வெற்றிக்கு காரணம் இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், ஏஎல் விஜய், பா ரஞ்சித், தரணி, ஹரி போன்றவர்கள்தான் காரணம். அவர்கள் கொடுத்த ஊக்கம், உத்வேகம், அவர்கள் வடிவமைத்த கதாபாத்திரம் போன்றவைகள்தான் காரணம். என்னிடம் இருந்த நடிப்பை வெளிப்படுத்த காரணமே இந்த இயக்குனர்கள்தான் என்றும் பெருமையாக பேசினார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படம்தான், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் முதன்முறையாக நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது. அதன்பிறகு வெளியான பிதாமகன் படம்தான் விக்ரமை மிகப்பெரிய நடிகர் வரிசைக்கே கொண்டு வந்தது. அந்த வகையில் இயக்குனர் பாலா பெயரை சொல்லி விக்ரம் பெருமையாக பேசாதது பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படம் பிரச்னையில் இருந்து டைரக்டர் பாலாவுடன், விக்ரம் பேசிக்கொள்வதில்லை என்பதால் அவர் பாலா பெயரை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்