தமிழ் சினிமாவில் செம்பருத்தி புலன்விசாரணை கேப்டன் பிரபாகரன் மக்கள் ஆட்சி ராஜமுத்திரை என பல ஹிட் படங்களை கொடுத்தவர் ஆர்கே செல்வமணி, செம்பருத்தி படத்தில் நடிகை ரோஜாவை அவர் அறிமுகம் செய்து வைத்தார். பிறகு அவரையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நடிகை ரோஜா ஆந்திரா அரசியலில் முக்கியமானவராக இருந்து வருகிறார்.
தமிழில் ரஜினி விஜயகாந்த் அஜீத்குமார் பிரபுதேவா பிரபு கார்த்திக் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் நடிகை ரோஜா. குறிப்பாக உழைப்பாளி வீரா உன்னிடத்தின் என்னைக் கொடுத்தேன் பரம்பரை என பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 1990களில் ரோஜாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் தன் கணவர் ஆர்கே செல்வமணியுடன் பங்கேற்ற நடிகை ரோஜா கூறியதாவது, சினிமாவில் வெள்ளையாக இருந்தால் அழகு என்று உடனே புக் செய்வார்கள். கருப்பாக இருந்தால் அழகாக இல்லை என்று நிராகரித்து விடுவார்கள். இதில் என் கணவர் ஆர்கே செல்வமணியின் குரு மணிவண்ணன் சார் பத்தி சொல்ல வேண்டும்.
செம்பருத்தி படத்தில் நான் நாயகியாக நடித்த போது, என்னய்யா எங்கேயுமே ஹீரோயின் கிடைக்காத மாதிரி அந்த கருப்பு பொண்ணை கூட்டீட்டு வந்து நடிக்க வைக்கறியே, இப்பதான் ரெண்டு படம் ஹிட் கொடுத்தே இனிமே ஹிட் கொடுக்கற ஐடியா இல்லையா என்று என் கணவரிடம் கேட்டிருக்கிறார்.
அதை ரொம்பநாள் கழித்து என் கணவர் என்னிடம் சொன்னார். அதன்பிறகு நான் பல படங்களில் நடித்தேன். மணிவண்ணன் சாருடன் சில படங்களில் நான் நடித்த போது எனக்கு, அவர் என் கணவரிடம் சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது. ஏன் சார், இப்ப நான் நல்லா நடிக்கிறேன்னு சொல்றீங்க? என் கணவர் கிட்ட அப்போ அப்படி சொன்னீங்களாமே என்று அவரிடமே நேரடியாக கேட்டுவிட்டேன்.
எனக்கு அப்போ உன்னை பார்த்தப்போ அப்படித்தான் தோணுச்சு, எனக்கு அப்போ தெரியாது இல்லையா, நீங்க இப்படி நல்லா நடிப்பீங்கன்னு இவ்வளோ நல்லா டான்ஸ் ஆடுவீங்கன்னு என்று மணிவண்ணன் சொன்னார். அதான் சார் போட்டோவை மட்டும் வெச்சு சொல்லாதீங்க சார், கலர் இருந்தால் மட்டுமில்லே, திறமையும் அவங்ககிட்ட இருக்கும் என அவரை கிண்டல் செய்தேன் என்று அந்த நேர்காணலில் நடிகை ரோஜா கூறியிருக்கிறார்.





