- Advertisement -
Homeபொழுதுபோக்குஅயோக்கியத்தனமான அரசியல்… கரூர் துயர சம்பவம் குறித்து ஆவேசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் -...

அயோக்கியத்தனமான அரசியல்… கரூர் துயர சம்பவம் குறித்து ஆவேசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் – ரொம்ப நாளைக்கு இந்த பருப்பு வேகாது என்றும் விளாசல்!

- Advertisement -

கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலியான் கூறியதாவது, கரூரில் உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விஜயை பார்க்கஆசையுடன் வந்தவர்களை வந்தவர்களை பாழாய்ப்போன சீக்கு பிடித்த கறை படிந்த மோசமான அரசியல்வாதிகளின் சதித்திட்டத்தால் மரணிக்க செய்யப்பட்டு இருக்கிறார்கள். அந்த 41 இதயங்களுக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூர் துயர சம்பவத்தை கேட்டதிலிருந்து எனக்கு இரண்டு நாட்களாக தூக்கமே இல்லை. கரூர் எனது சொந்த ஊர். இன்னும் என்னுடைய வீடு கள்ளப்பட்டியில் தான் உள்ளது. அவர்கள் உயிரிழந்த போது எவ்வளவு கஷ்டப்பட்டு மிதிபட்டு அடிபட்டு குழிக்குள் விழுந்து இறந்திருப்பார்கள் என்று நினைக்கும் போதே எனது மனம் வேதனையாக இருக்கிறது.

- Advertisement -

நம் நாட்டில் இப்படியும் நடக்கிறதா என நினைக்கும் போது அவமானமாக இருக்கிறது. விஜயின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றால் அவரைக் கொள்கை ரீதியாக எதிர்க்கலாம். கூட்டம் போட்டு அவருக்கு பேச தெரியவில்லை என சொல்லலாம். இதுவரை நான்கு கூட்டங்கள் நடந்து இருக்கிறது. எதிலும் கேட்ட இடம் கொடுக்கவில்லை என தம்பி விஜய் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறார்.

அப்படி இருக்கும்போது தற்போது நடந்திருக்கும் இந்த சம்பவம் அயோக்கியத்தனமான அரசியல் தானே? சொந்த மக்களை சொந்த ஊர்க்காரன் மக்களை காவு கொடுத்து விட்டு இப்படி நல்லவன் வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. அதில் மக்கள் யார் வரவேண்டும் என்பதை சொல்வார்கள்.

- Advertisement -

சில அரசியல்வாதிகள் கோமாளித்தனமாக நடந்து கொண்டார்கள். நம்மையும் கோமாளி ஆக்கினார்கள். சிலர் முடியாமல் கோமாளியாக இருப்பதே நல்லது என ஒதுங்கி விட்டார்கள். பல ஜாம்பவான்களை விலை கொடுத்து வாங்கி விட்டார்கள். பெரிய திமிங்கலமாக முதலையாக அடக்க ஆளில்லை என்பது போல சென்று கொண்டிருக்கிறார்கள். ரொம்ப நாளைக்கு இந்த பருப்பு வேகாது. இன்னும் ஆறு மாதத்தில் மக்கள் இதற்கான தீர்ப்பை தருவார்கள். விஜய் மாநாடு நடத்துவதற்கு 28 கண்டிஷன்களை போட்டார்கள். எந்த கட்சிக்காவது இப்படி கண்டிஷன்களை போட்டார்களா?

மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடும் என தெரிந்தும் போலீஸ் பாதுகாப்பு அதிகளவில் கொடுத்து இருக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு ஏன் கொடுக்கவில்லை? அது மட்டும் இல்லாமல் முட்டுச்சந்தில் பிரச்சாரம் நடத்துவதற்கு ஏன் அனுமதி கொடுத்தீர்கள். கொஞ்சம் விட்டு இருந்தால் விஜய் தம்பியை குழிக்குள் போட்டு மூடி ஜன கண மன பாடி இருப்பார்கள். இது அரசியலா? கேவலமாக இல்லை. அயோக்கியத்தனமான அரசியலை செய்துகொண்டு இருக்கிறார்கள். என்னுடைய முழு ஆதரவு விஜய்க்கு தான் என்று நடிகர் மன்சூர் அலிகான் அந்த நேர்காணலில் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்