- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாகும் புஷ்பா 2 படம், டிரெய்லர் எப்போன்னு தெரியுமா? ரசிகர்களை...

வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸாகும் புஷ்பா 2 படம், டிரெய்லர் எப்போன்னு தெரியுமா? ரசிகர்களை தெறிக்க விடும் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் வந்தாச்சு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் படங்கள் குறிஞ்சி மலர் போல எப்போதேனும்தான் அமைகிறது. அந்த வகையில் யதார்த்த கதைக்களத்தில் உருவான காக்கா முட்டை, குட்நைட், பார்க்கிங், சித்தா, மகாராஜா சமீபத்தில் வெளியான லப்பர் பந்து வரை குறிப்பிட்ட படங்களை மட்டுமே சொல்ல முடியும்.

அதே நேரத்தில் மசாலா கலந்த கதையாக இருந்தாலும், ஹீரோயிசம் பேசும் திரைச்சித்திரமாக இருந்தாலும் அதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படங்கள் அவ்வப்போது வரவே செய்கின்றன. பாகுபலி, கேஜிஎப், காந்தாரா, புஷ்பா போன்ற படங்களை அந்த ரகத்தின் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக சொல்லலாம்.

- Advertisement -

அதிலும் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா படம் செம்மர கடத்தலை கதைக்களமாக கொண்டது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஊ சொல்றியா மாமா பாடலை ஆண்ட்ரியா பாடியிருந்தார். இந்த ஐயிட்டம் பாட்டுக்கு சமந்தாவின் குத்தாட்டம் பெரிய அளவில் ரீச் கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி புஷ்பா 2 படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது டிசம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாவது உறுதியாகி உள்ளது. முதல் பாகம் படத்துக்கு கிடைத்த அபார வெற்றியால், 2ம் பாகம் படம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்னும் 25 நாட்களில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

புஷ்பா 2 படம் வெளியாக இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோசன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்கு முன்னதாக புஷ்பா 2 படத்தின் டிரெய்லர் வருகிற 17ம் தேதி ரிலீஸாகிறது. பாட்னாவில் நடக்கும் புஷ்பா 2 பட விழாவில், டிரெய்லர் வெளியீடு செய்யப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா, சுனில், டைரக்டர் சுகுமாறன் உள்ளிட்ட படக்குழு கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், கொச்சி மற்றும் பாட்னா ஆகிய 7 நகரங்களில் புஷ்பா 2 பிரமோசன் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இங்கு ரசிகர்கள் சந்திப்பு, செய்தியாளர் சந்திப்பு, படத்தின் அடுத்தடுத்த அப்டேட் என புஷ்பா 2 வைப்பை அதிகரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்