- Advertisement -
Homeபொழுதுபோக்குஇத்தனை வருஷமா என்னை முன்னேறவே விடலே, விஜய் அஜீத் சூர்யா எல்லாம் என்னை அப்படி...

இத்தனை வருஷமா என்னை முன்னேறவே விடலே, விஜய் அஜீத் சூர்யா எல்லாம் என்னை அப்படி நினைக்கிறாங்க – ஆவேசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்தவர் மன்சூர் அலிகான். ஆனால் பல படங்களில் காமெடி உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பான நடிப்பை மன்சூர் அலிகான் தந்திருக்கிறார். சில படங்களில் அவரே நாயகனாகவும் நடித்திருக்கிறார். பல படங்களை சொந்தமாக தயாரித்த தயாரிப்பாளராகவும் மன்சூர் அலிகான் இருக்கிறார்.

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இருந்து பிறகு பல படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தவர். அவரது திறமையை பார்த்த நடிகர் விஜயகாந்த், தனது 100வது படம் கேப்டன் பிரபாகரன் படத்தில் பிரதான வில்லன் கேரக்டரில் மன்சூர் அலிகானை நடிக்க வைத்தார். சந்தன கடத்தல் வீரப்பன் கேரக்டரை அப்படியே வீரப்பத்திரன் கேரக்டராக மாற்றி மன்சூர் அலிகானை அதில் நடிக்க வைத்திருந்தனர்.

- Advertisement -

முதல் படத்திலேயே வில்லன் கேரக்டரில் வேற லெவலில் தன் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் பல படங்களில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் உள்ளிட்டோர் படங்களில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்தார். எந்தவிதமான கேரக்டர் என்றாலும் அதில் மன்சூர் அலிகான் அசத்தி விடுவார்.

அரசியல் களத்திலும் இறங்கிய நடிகர் மன்சூர் அலிகான், பெரிய அளவில் அரசியலில் வரவேற்பை பெற முடியவில்லை. கடந்த முறை பார்லிமென்ட் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவ்வப்போது செய்தியாளர்களிடம் மனதில் பட்டதை பேசி வருபவர் மன்சூர் அலிகான். அது இணையத்திலும் வைரலாகி விடுகிறது.

- Advertisement -

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது,
விஜய் அஜீத்குமார் சூர்யா போன்ற ஹீரோக்கள் எல்லாம் நான் அவ்வளவு சம்பளம் வாங்கற வில்லன்னு நெனைச்சுக்கிட்டு இருக்காங்க. வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வர்றாங்க. அவங்களை வில்லனா போட்டு எடுக்கறாங்க. சன் டிவியில் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் என்று என்னை போடறாங்க.

நானா வில்லன்? அப்ப நீங்க யாரு? இல்லே ரெட் ஜெயின்ட் எடுக்கிற படத்திலாவது என்னை வில்லனா போடறீங்களா? இல்லே தலைவன் தலைவி படத்துல நான் வில்லனா? இல்லே கூலியில் நான் வில்லனா? இன்னும் என்னை வில்லனாகவே வெச்சிருக்கீங்களேப்பா. என்னை முன்னேற விடாம என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்