- Advertisement -
Homeபொழுதுபோக்குஅனுமதி மறுத்த ஐதராபாத் போலீசார், அடம்பிடித்த நடிகர் அல்லு அர்ஜூன் - கடைசியில் நடந்தது என்ன?...

அனுமதி மறுத்த ஐதராபாத் போலீசார், அடம்பிடித்த நடிகர் அல்லு அர்ஜூன் – கடைசியில் நடந்தது என்ன? – நிழல் ஹீரோ நிஜ ஹீரோவாக நடந்திருக்காரே?

- Advertisement -

திரைப்படங்களில் வரும் ஹீரோ நடிகர்கள் பல ஹீரோயிசங்களை நிகழ்த்தி காட்டுகின்றனர். ஒரே நேரத்தில் 100 பேரை அடித்து வீழ்த்துகின்றனர். பாய்ந்து வரும் ரயிலை, ஒற்றை சுண்டுவிரலால் தொட்டு நிறுத்துகின்றனர். வானத்தில் வாகனத்தில் பறந்து செல்கின்றனர். திரையில் நடிக்கும் ஹீரோவுக்கு எதுமே சாத்தியமாகிறது என்பது அப்பட்டமான பொய் என்றாலும் பல ரசிகர்கள் அதை நிஜம் என்று நம்பியே தியேட்டர்களில் கைதட்டுகின்றனர்.

ஆனால் உண்மையில் ஹீரோயிசம் காட்டும் பல நடிகர்கள், நிஜத்தில் இயக்குனர் சொன்னதை அப்படியே கேமரா முன்பு நின்று செய்துகாட்டிவிட்டு கணிசமான சம்பளம் பெறும் நடிகர்களாக மட்டுமே இருக்கின்றனர். சாதாரண மனிதர்களிடம் இருக்கும் ஒரு ஹீரோத்தனம் கூட பல நடிகர்களிடம் இருக்காது என்பதுதான் இதில் கசப்பான உண்மை.

- Advertisement -

ஆனால் இதில் மிகவும் வித்யாசப்பட்டு நிற்கிறார் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன். தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் அல்லு அர்ஜூன். நடிகை அனுஷ்கா நடிப்பில் ருத்ரமாதேவி என்ற படம் வெளியான போது, தெலுங்கில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான அந்த படத்தில் கோணக்கண்ணா ரெட்டி என்ற கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜூன் பரிச்சயமானார்.

ஆனால் புஷ்பா படத்தில் அவரது மாஸ் நடிப்பை பார்த்த பிறகு தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். செம்மர கடத்தல் கதைக்களத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் பின்னி பெடலெடுத்து இருந்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 5ம் தேதி, புஷ்பா 2 படமும் வெளியாக இதுவரை 1850 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.

- Advertisement -

இந்த சூழலில் ஐதராபாத்தில் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படம் பிரிமியர் ஷோ நடந்த போது, ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். ரேவதியின் 9 வயது மகனும் நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

அந்த சிறுவனை நேரில் சென்று பார்க்க அல்லு அர்ஜூன் முடிவு செய்த நிலையில், ஐதராபாத் போலீசார் மறுப்பு தெரிவித்தனர். எங்கள் தடையை மீறிச் சென்றால் அங்கு ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு நீங்களே பொறுப்பு என்று எச்சரித்தனர். எனினும் போலீஸ் உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்ற நடிகர் அல்லு அர்ஜூன், மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த சிறுவனை பார்த்து 20 நிமிடங்கள் பேசி ஆறுதல் கூறிவிட்டு டாக்டர்களிடம் சிறுவனுக்கு தரப்படும் சிகிச்சைகள் குறித்து விசாரித்துவிட்டு வந்திருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்