- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கார்த்தி செஞ்சது ரொம்ப பெரிய தப்பு, அது நான் நடிக்க வேண்டிய படம் -...

நடிகர் கார்த்தி செஞ்சது ரொம்ப பெரிய தப்பு, அது நான் நடிக்க வேண்டிய படம் – நடிகர் மன்சூர் அலிகான் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய 2வது படம்தான் கைதி. நடிகர் கார்த்தி நடித்த இந்த படம் 57 இரவுகள் மற்றும் ஒரு அரைநாள் பகலில் படமாக்கப்பட்ட படமாகும். இதில் ஒரு நாள் இரவு முழுவதும் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதையாக இருந்தது.

கைதி படத்தில் கதாநாயகி இல்லை; இந்த படத்தில் பாடல்களும் கிடையாது. காமெடி காட்சிகளும் கிடையாது. போதை மருந்து கலக்கப்பட்ட மதுபானம் குடிக்கும் போலீஸ் அதிகாரிகள், அனைவரும் மயங்கி விடுவர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவர்களை லாரியில் போட்டுக்கொண்டு மருத்துவமனையில் கொண்டு சேர்க்கும் ஹீரோவின் கதைதான் இது.

- Advertisement -

இதற்கிடையே போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து விடும் ரவுடிக்கும்பலிடம் போலீஸ்காரர் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் மாட்டிக்கொள்கின்றனர். சிறையில் இருக்கும் பெரிய தாதாவை மீட்க ரவுடிகள் கூட்டம் போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அட்ராசிட்டி செய்ய அங்கும் கிளைமாக்ஸில் ஹீரோ வந்து அவர்களை காப்பாற்றுகிறார்.

இந்த படம் நடிகர் கார்த்திக்கு அவரது திரை பயணத்தில் மிக முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது. பருத்திவீரன் துவங்கி மெய்யழகன் வரை இதுவரை கார்த்தி நடித்த 26 படங்களில் பருத்திவீரனுக்கு பிறகு கார்த்திக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த படம்தான் கைதி. ஆனால் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் மன்சூர் அலிகான்தான்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலிகான் கைதி படம் குறித்து கூறியதாவது, கைதி படம் எனக்காக லோகேஷ் கனகராஜ் எழுதிய கதை. இதை நடிகர் கார்த்திக்கிட்டே சொல்லி இருக்கார். அப்போ கார்த்தி என்ன சொல்லி இருக்கணும்? பாவம் அவர் வாய்ப்பு இல்லாமல் இருக்கார்.

இந்த படம் அவருக்கு டர்னிங் பாயிண்ட் படமாக இருக்கட்டும். அவரை வைத்தே எடுங்கன்னு சொல்லி இருக்கணும். அப்போதான் அவர் ஹீரோ. நல்ல கதை என்றதும் அவரே வாங்கிப் போட்டுக்கிட்டா எப்படி எல்லோரும் இங்கே வாழ முடியும்? நானும் இங்கே ஒரு நடிகன் என்று இருக்கிறேன் அல்லவா என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆதங்கமாக பேசியிருக்கிறார். மாஸ் ஹிட் கொடுத்த கைதி படம், மன்சூர் அலிகான் நடிக்க வேண்டிய படமா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்