- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிரத்னம் இயக்கிய அந்த படத்தில் நடிக்க மறுத்த நடிகர் மைக் மோகன், அந்த ஒரு சீன்தான்...

மணிரத்னம் இயக்கிய அந்த படத்தில் நடிக்க மறுத்த நடிகர் மைக் மோகன், அந்த ஒரு சீன்தான் காரணமாம் – அவரே சொன்ன ஆச்சரியமான தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே ஒரு மறக்க முடியாத நடிகராக அவர்களது மனதில் நின்றவர் நடிகர் மோகன். பல படங்களில் அவர் மைக் பிடித்து பாடும் கேரக்டரில் பாடகராக நடித்ததால் அவருக்கு மைக் மோகன் என்ற பெயர் அடையாளமாகி விட்டது. 1980களில் வெள்ளி விழா நாயகன் என்றால் அது நடிகர் மோகன் மட்டும்தான்.

இளையராஜா இசையில் நடிகர் மோகன் நடித்த படங்களில் எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக இருந்து அவரது படங்களுக்கு பெரிய வரவேற்பை வெற்றியை தேடித் தந்தன. ரஜினி கமல் அளவுக்கு அந்த காலகட்டத்தில் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு கூட்டம் கூட்டமாக சென்று நடிகர் மோகன் நடித்த படங்களை ஆர்வமாக பார்த்து அவரை கொண்டாடினர்.

- Advertisement -

மெல்லத் திறந்தது கதவு இதயக்கோவில் மௌனராகம் நான் பாடும் பாடல் பயணங்கள் முடிவதில்லை கிளிஞ்சல்கள் விதி உதய கீதம் குங்குமச் சிமிழ் 24 மணி நேரம் கோபுரங்கள் சாய்வதில்லை 100வது நாள் பாடு நிலாவே உயிரே உனக்காக தென்றலே என்னைத் தொடு இளமை காலங்கள் ரெட்டைவால் குருவி என அவர் நடித்த பல படங்கள் வெள்ளி விழா படங்களாக வெற்றி பெற்றன.

நடிகர் மோகன் பெங்களூருவை சேர்ந்தவர். தாய்மொழியாக கன்னடம் பேசும் அவருக்கு தமிழ் தெரியாது. அவரது படங்களில் அவருக்கு பின்னணி குரல் கொடுத்து டப்பிங் பேசியது நடிகர் மற்றும் பாடகர் எஸ்என் சுரேந்தர்தான். இவர் நடிகர் விஜயின் சொந்த தாய்மாமா. அதாவது விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் 1990ம் ஆண்டில் வெளியான படம் அஞ்சலி. ரகுவரன் ரேவதி பேபி ஷாம்லி பிரபு விகே ராமசாமி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் குழந்தைகளுக்கான ஒரு படமாக இருந்தது. அதே நேரத்தில் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது. ஆனால் இந்த படத்தில் முதலில் ரகுவரன் கேரக்டரில் நடிக்க இருந்தது நடிகர் மோகன் தான் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மோகன் கூறியதாவது, மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் நான்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. எப்பவுமே நான் படத்தோட கதையை முழுசா கேட்டுட்டுதான் அந்த படத்தில் நடிக்க ஒத்துக்குவேன். ஆனா அஞ்சலி படத்தில் எனக்கு உடன்பாடு இல்லாத விஷயம் என்னவென்றால், அந்த ஸ்பெஷல் குழந்தையை வேற ஒரு ரூமில் படுக்க வைக்கறதுதான். அந்த குழந்தை அப்பாவான என் கூடதான் படுத்து தூங்கணும். அந்த ஒரு சீன் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லாததால் அஞ்சலி படத்தில் நான் நடிக்கலே என்று நடிகர் மோகன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்