- Advertisement -
Homeபொழுதுபோக்குமனிதர்களுக்கு பக்தி என்பது தேவையில்லே… கோவிலுக்கும் போக வேண்டாம் - ஐயப்ப குருசாமி நடிகரே ...

மனிதர்களுக்கு பக்தி என்பது தேவையில்லே… கோவிலுக்கும் போக வேண்டாம் – ஐயப்ப குருசாமி நடிகரே இப்படி சொல்லலாமா? குழப்பமடைந்த ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வில்லன் நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஆனால் அன்று முதல் இன்று வரை வில்லன் நடிகர் என்றாலே உடனே ரசிகர்களில் பலருக்கும் நினைவுக்கு வருபவர் எம்என் நம்பியார் தான். எப்போதுமே அவரது வில்லன் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பும் பாராட்டும் தனி ரகம்தான். ஏனெனில் பார்வையிலும் முக பாவனையிலும் உடல் மொழியிலும் வில்லனுக்கே அகராதி எழுதிய நடிப்பு கலைஞர் அவர்தான்.

அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் நடித்த பல படங்களில் எம்என் நம்பியார் காட்டிய வில்லத்தனம் இப்போதும் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு காட்சியில் எம்ஜிஆரும் நம்பியாரும் பேசிக்கொள்வார்கள். அதில் மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? என்று எம்என் நம்பியார் எம்ஜிஆரிடம் கேட்க அதற்கு எம்ஜிஆர் சிறிய புன்முறுவலோடு சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் என்பார்.

- Advertisement -

அதற்கு, தோல்வியே அறியாதவன் நான் என்பார் நம்பியார். அதற்கு எம்ஜிஆர், எதிரிகளுக்கு தோல்விகளை பரிசளித்தே பழகியவன் நான் என்று பதில் அளிப்பார். இப்போதும் இந்த காட்சியை ரசிகர்கள் கைதட்டி விசிலடித்து கொண்டாடி மகிழ்வார்கள். நடிப்பில் அப்படி ஹீரோவுக்கு இணையான ஒரு வில்லன் நடிப்பை வெளிப்படுத்திய மகா கலைஞன் நம்பியார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்தான் உண்மையான நாயகன். மிக தீவிரமான ஐயப்ப சுவாமி பக்தர். மது புகை பழக்கம் அறவே இல்லாதவர். மாமிசம் சாப்பிடாதவர். ஆரம்பத்தில் இராணுவத்தில் சேர்ந்த அவர் அங்கு அசைவம் சாப்பிட வேண்டும் என்பதால் அந்த பணியையே வேண்டாம் என்று ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். 50 ஆண்டுகளுக்கு மேலாக சபரிமலைக்கு பாத யாத்திரை மேற்கொண்டவர்.

- Advertisement -

ஆனால் எம்என் நம்பியார் பாபா படத்தில் ரஜினியுடன் கடைசியாக நடித்தார். அதன்பிறகு மறைந்து விட்டார். அவர் மறைவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அப்போது ஐயப்ப குருசாமி எம்என் நம்பியார் கூறியதாவது, என்னைப் பொறுத்த வரைக்கும் பக்தி தேவையில்லை. ஆனால் ஒழுக்கம் தேவை. ஒழுக்கம் கட்டுப்பாடு இருந்தால் ஒருவனுக்கு பக்தி தேவையில்லை. இதுதான் என்னுடைய கணிப்பு.

அனைவரும் கோவிலுக்கு போகணும் என்று நான் சொல்ல மாட்டேன். நான் போகிறேன். எனக்கு அதற்கான நேரம் ஒதுக்க முடியும். அதனால் கோவிலுக்கு போகிறேன். விரதமும் இருக்கிறேன். மனசை ஒருமுகப்படுத்த நாம முயற்சி பண்ணி அதில் ஓரளவு வெற்றி அடைந்தால் அதுதான் கோவில். மனம் கோவில் ஆனால் நீங்க கோவிலுக்கு போக வேண்டிய அவசியமே இல்லை என்று நடிகர் எம்என் நம்பியார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்