- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அவர்களை கோவிலுக்கு போங்க என்று சொல்ல மாட்டேன், எம்ஜிஆர் பட வில்லன் நடிகர் எம்என்...

நான் அவர்களை கோவிலுக்கு போங்க என்று சொல்ல மாட்டேன், எம்ஜிஆர் பட வில்லன் நடிகர் எம்என் நம்பியார் சொன்ன ஆன்மிக தத்துவம் – குருசாமியே இப்படி பேசியிருக்காரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் படங்கள் பற்றி பேசினாலே, அடுத்த நிமிடம் ரசிகர்களின் மனதில் எம்என் நம்பியார் உருவம் வந்துவிடும். அந்தளவுக்கு எம்ஜிஆர் படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து பெயர் பெற்றவர் எம்என் நம்பியார். படத்தில் மிக மோசமான மனிதராக ரசிகர்களால் வெறுக்கப்படும் எம்என் நம்பியார் உண்மையில் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத பண்பான மனிதர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்தவர். குருசாமி என்று அழைக்கப்பட்டவர். ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களை சபரிமலைக்கு அழைத்து சென்றவரே குருசாமி எம்என் நம்பியார்தான். சபரிமலை ஐயப்ப சாமியை முதலில் தமிழக மக்கள் மத்தியில் பிரபலம் செய்ததே எம் என் நம்பியார்தான் என்றால் அது மிகையல்ல. கடைசியாக நடிகர் ரஜினியுடன் பாபா என்ற படத்தில் நடித்தார். பிறகு வயது முதுமையால் அவர் மறைந்து விட்டார்.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நடிகர் எம் என் நம்பியார் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ஒழுக்கம் கட்டுப்பாடு இருந்தால் அவர்களுக்கு பக்தி தேவையில்லை. இதுதான் என்னுடைய கணிப்பு. நான் அவர்களை கோவிலுக்கு போங்க என்று சொல்ல மாட்டேன். கோவிலுக்கு நான் போறேன். அதற்கு எனக்கு நேரம் கிடைக்குது. விரதம் இருக்க டைம் இருக்குது அதனால் நான் போறேன்.

மனதை ஒருமுகப்படுத்துவதற்கு நாம் முயற்சி பண்ணி அதில் ஓரளவு வெற்றி அடைய முடியும் என்றால் அதுதான் கோவில். நீங்கள் கோவிலுக்கு போக வேண்டியது இல்லை. ஆயிரக்கணக்கான மக்களின் மனசு அந்த எண்ணம் ஒரு கோவிலில் போய் சேரும்போது அந்த இடத்துக்கு ஒரு சக்தி உண்டாகிறது.

- Advertisement -

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ அதை நாம் மறுக்க முடியாது. அந்த சக்தியை மனப்பூர்வமாக உண்மையாக விரும்புகிறவர்களுக்கு வேண்டிக் கொள்பவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அருள் கிடைக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம். ஏனென்றால் மனிதர்களின் மனதுக்கு ஒரு பலம் இருக்கிறது.

கஷ்டமில்லாமல் சினிமாவில் சேர்ந்த ஒரே நடிகன் நான்தான். இதை நான் பெருமையாக சொல்லவில்லை. இன்னைக்கு நான் வாழ்ந்திட்டிருக்கிற ஒரு வாழ்க்கை, என் தகுதிக்கு மீறிய ஒரு வாழ்க்கை நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் என்றால் என்னைவிட நல்லவர்களும், என்னைவிட கெட்டிக்காரர்களும் இன்னும் மோசமான நிலைமையில் இருக்கின்றனர் என்று மறைந்த பழம்பெரும் நடிகர் எம்என் நம்பியார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்