நடிகர் விஜய் இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடிக்க வேண்டிய போர்ஷன் எல்லாமே முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் சில தொழில்நுட்ப காட்சிகளில் நடிக்க வேண்டியது மட்டுமே பாக்கி இருப்பதால், அவர் அமொிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சென்னை விமான நிலையில், அவர் மாஸ்க் அணிந்தபடி சென்ற காட்சிகள், சமீபத்தில் வைரலானது.
சமூக வலைதளங்களில் புழக்கம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், விஜய் அஜீத் ரஜினிகாந்த் போன்றவர்களின் படங்கள் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். அதனால் படத்தின் ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மட்டுமின்றி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளிடம் அதுபற்றி கேட்டு விடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
நடிகர் மோகன், மைக் மோகன் என அழைக்கப்படுபவர். ஏனெனில் கடந்த 1980, 90களில் மிக முக்கியமான முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் இருந்தவர். வெள்ளி விழா நாயகனாக அவர் கொண்டாடப்பட்டவர். ரஜினி, கமலை போலவே மோகன் படங்களும் பெரிய அளவில் வெற்றிப் படங்களாக கொண்டாடப்பட்டவை.
குறிப்பாக மோகன் படங்கள் என்றாலே, அந்த படங்களில் தேனில் விழுந்த பலாச்சுளை போல தெவிட்டாத பாடல்கள் நிறைந்திருக்கும். அதனால் அவருக்கு மைக் மோகன் என்றே ஒரு பட்டப் பெயர் உண்டு. ஏனெனில் பெரும்பாலான படங்களில் அவர் மைக் பிடித்தபடியே காணப்படுவார். எப்போதும் பாடுவது போன்ற கேரக்டரிலேயே மோகன் நடிப்பது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் மைக் மோகன் நடிக்க வந்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில், இவரை வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு. அதே போல் இந்த படத்தில் நடிகர் பிரசாந்தும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மைக் மோகனிடம், விஜய் படம் குறித்து அப்டேட் கொடுங்க என கேள்வி எழுந்துள்ளது. அதற்கு சிரித்தபடி பதிலளித்த மோகன், இயக்குனர் வெங்கட்பிரபுவிடமும், படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திடமும் கேட்டுவிட்டு பிறகு அப்டேட் சொல்கிறேன், என்று பதில் அளித்திருக்கிறார். அப்டேட் சொல்வதை தவிர்க்க, இவ்வளவு நாசூக்காக மைக் மோகன் பதில் சொன்னதால், சீனியர் எப்பவுமே சீனியர்தாம்பா என பலரும் பாராட்டி வருகின்றனர்.





