- Advertisement -
Homeபொழுதுபோக்குமுடிவுக்கு வரும் சிவகார்த்திகேயனின் மதராஸி பட சூட்டிங்... கிளைமாக்ஸ் காட்சிக்காக படக்குழுவினர் எங்கு சென்றுள்ளார்கள் தெரியுமா...

முடிவுக்கு வரும் சிவகார்த்திகேயனின் மதராஸி பட சூட்டிங்… கிளைமாக்ஸ் காட்சிக்காக படக்குழுவினர் எங்கு சென்றுள்ளார்கள் தெரியுமா…

- Advertisement -

சிவகார்த்திகேயனுக்கு கடந்த ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. ரங்கூன் திரைப்படத்தை எடுத்திருந்த ராஜ்குமார் பெரியசாமி இதனை இயக்கி இருந்தார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரித்திருந்தது. சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சாய் பல்லவியின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். இந்தப் படத்திற்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்தார் சிவகார்த்திகேயன். படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக வருகிறார்.

- Advertisement -

துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யூத் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தொடங்கியது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங்கை நடத்தினார் முருகதாஸ். திருச்செந்தூர் சுற்றுவட்டார இடங்களிலும் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இந்தப் பணியின் போது முருகதாஸுக்கு ஹிந்தியில் இருந்து அழைப்பு வந்தது. சல்மான் கானை வைத்து சிக்கந்தர் படத்தை எடுக்க வாய்ப்பு கிடைத்ததால் மதராஸி திரைப்படத்தை அப்படியே விட்டுவிட்டு அங்கு சென்று விட்டார் முருகதாஸ். சிவகார்த்திகேயனும் எதுவும் சொல்லாமல் அவருக்காக காத்திருந்தார். அங்கு விறுவிறுப்பாக படத்தை எடுத்து முடிக்க, கடந்த ரம்ஜானுக்கு சிக்கந்தர் ரிலீஸ் செய்யப்பட்டது.

- Advertisement -

ஆனால் தொய்வான திரைக்கதை, சலிப்பூட்டும் காட்சிகளால் அந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை. சிவகார்த்திகேயனும் சுதா கொங்கரா உடன் இணைந்து பராசக்தி திரைப்படத்தில் நடிக்க சென்று விட்டார். அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கான பணிகள் மட்டும் தான் இருப்பதாக இயக்குனர் தெரிவித்து இருந்தார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து சில சிக்கல் ஏற்பட்டிருப்பதால் தற்போதைக்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இடைவேளையில், மதராஸி திரைப்படத்தில் கவனம் செலுத்துகிறார் சிவகார்த்திகேயன். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கிளைமாக்ஸ் நோக்கி பட குழு நகர்ந்து இருக்கிறது. இதற்காக படக்குழுவினர் இலங்கை சென்றுள்ளனர். அங்கு வித்யூத் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறதாம். அனேகமாக டிசம்பர் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்