- Advertisement -
Homeபொழுதுபோக்குசொந்த குடும்பமே ஒதுக்கி வச்சிடுச்சு- ஜூனியர் என்டிஆர் வாழ்வில் ஏற்பட்ட சோகம், கில்லி போல் சொல்லி...

சொந்த குடும்பமே ஒதுக்கி வச்சிடுச்சு- ஜூனியர் என்டிஆர் வாழ்வில் ஏற்பட்ட சோகம், கில்லி போல் சொல்லி அடித்த நடிகர்

- Advertisement -

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர், ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் பிரபல நடிகருமான என்.டி.ராமாராவின் பேரன் ஆவார். என்.டி.ராமாராவின் மூத்த மகனான நந்தமுரி ஹரிகிருஷ்ணாவின் மகன்தான் ஜூனியர் என்டிஆர். தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா, ஜூனியர் என்டிஆருக்கு சித்தப்பா முறை. இவ்வாறு தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய செல்வாக்கு பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்தான் ஜூனியர் என்டிஆர்.

இவ்வளவு பெரிய செல்வாக்கு பெற்ற குடும்பத்தில் ஜூனியர் என்டிஆர் பிறந்திருந்தாலும் அவருக்கு பின்னால் ஒரு பெரும் சோகம் ஒன்று இருக்கிறது. அதாவது என்.டி.ராமாராவின் குடும்பமே ஜூனியர் என்டிஆரின் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டதாம். இதற்கான பின்னணியை குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளாரான செய்யாறு பாலு, தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

அதாவது நந்தமுரி ஹரிகிருஷ்ணா, ஷாலினி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாராம். இத்தம்பதியினருக்கு பிறந்தவர்தான் ஜூனியர் என்டிஆர். ஹரிகிருஷ்ணா இரண்டாவது திருமணம் செய்துகொண்டது என்.டி.ராமாராவ் குடும்பத்திற்கு பிடிக்கவில்லையாம். ஆதலால் ஹரிகிருஷ்ணாவை ஒதுக்கியே வைத்திருந்தார்களாம். மேலும் ராமாராவின் பெயரை எங்கேயும் பயன்படுத்தவோ சொல்லிக்கொள்ளவோ கூடாது என்று கூறிவிட்டார்களாம். இதனால் ஜூனியர் என்டிஆரையும் அவரது பெற்றோரையும் ராமாராவ் குடும்பத்தினர் தங்களோடு சேர்த்துக்கொள்ளவே இல்லையாம்.

ஆதலால் ஜூனியர் என்டிஆரை எப்படியாவது பெரிய நடிகராக ஆக்கவேண்டும் எனவும் மீண்டும் ராமாராவ் குடும்பத்தினர் தானாகவே சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவரது தாயார் முடிவெடுத்தாராம்.  ஜூனியர் என்டிஆர் சிறு வயதில் இருந்தபோது பள்ளிக்கூடத்தில் ஃபேன்சி டிரெஸ் போட்டியில் கிருஷ்ணர் வேஷம் போட்டுப்பார்த்தார்களாம். ஜூனியர் என்டிஆரை கிருஷ்ணர் வேஷத்தில் பார்த்த பலரும் அப்படியே என்.டி.ராமாராவை போல் இருப்பதாக கூறினார்களாம்.

- Advertisement -

அதனை தொடர்ந்து சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது ரசிகர்கள் பலரும் அவரை என்.டி.ராமாராவின் சாயலில் இருப்பதாக கூறினார்களாம். அதன் பின் கதாநாயகனாக நடித்தபோது ஜூனியர் என்டிஆராக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்களாம். அதன் பிறகுதான் ஜூனியர் என்டிஆரை, ராமாராவ் குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டார்களாம்.

- Advertisement -

சற்று முன்