- Advertisement -
Homeபொழுதுபோக்குகுணச்சித்திர நடிகர் மோகன் சர்மாவுக்கு இப்படி ஒரு நிலமையா? பல படங்களை டைரக்ட் செய்தவராச்சே? ரூ....

குணச்சித்திர நடிகர் மோகன் சர்மாவுக்கு இப்படி ஒரு நிலமையா? பல படங்களை டைரக்ட் செய்தவராச்சே? ரூ. 1 லட்சம் கொடுத்து உதவிய ரஜினிகாந்த்!

- Advertisement -

புனேவில் உள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடிப்பு பயின்ற முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் மோகன் சர்மா. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மொழிகளில் ஏகப்பட்ட படங்கள் நடித்தவர். திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என சினிமாவின் பல்வேறு தளங்களில் இயங்கியவர்.

தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் சினிமா விருதுகளை வாங்கியவர். ஃபிலிம் சேம்பர் எனப்படும் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் ஒரு காலகட்டத்தில் இருந்தவர். இத்தனை பெருமைக்குரிய மோகன் சர்மா தற்போது த‌ன்னுடைய 80வது வயதில் சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் மோகன் சர்மா கூறியதாவது, சினிமாவுல பிஸியாக இருந்த காலத்துல சென்னையில போயஸ் கார்டன் பகுதியில் எனக்கு வீடு இருந்தது. நான் தயாரித்து இயக்கிய நம்ம கிராமம்’ படத்துல நடிச்ச நடிகை சுகுமாரிக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைச்சது. கேரள அரசின் விருதும் அந்தப் படத்துக்கு கிடைச்சது.

முதல் இன்னிங்ஸ் சினிமான்னா அடுத்து சீரியல் பக்கம் வந்தேன். அங்கயும் நிறைய சீரியல் பண்ணினேன். சினிமா சீரியல் ரெண்டும் என்னை பிசியா வச்சிருந்தாலும் குடும்ப வாழ்க்கை எனக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரலை. வெளியில சொல்ல முடியாத துயரத்தையெல்லாம் சந்திச்சேன். ஒரு கட்டத்துல போயஸ் கார்டன் வீட்டை வித்துட்டேன். அதுலயும் சில வில்லங்கங்கள் வந்துவிட்டது.

- Advertisement -

நாளாக ஆக உடலும் மனசும் ரொம்பவே சோர்ந்து போயிடுச்சு. கையில காசு இல்லை. நோய் நொடினு வந்தா பக்கத்துல இருந்து பார்க்க ஆள் இல்லை. வாழ்க்கையே வெறுத்துப் போயிடுச்சு. இந்தச் சூழல்லதான் முன்னாடி ரோட்டரி கிளப்களில் ஆக்டிவா இருந்த போது தொடர்பிலிருந்த சில நல்ல உள்ளங்கள் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வருகிற இந்த முதியோர் இல்லத்தைக் காட்டி இங்க வந்து சேர்த்து விட்டாங்க.

ஜெயின் சமூகத்தினர் நடத்துகிற இந்த இல்லத்தில் இப்போதைக்கு தங்க இடமும் சாப்பாடும் இலவசமா தந்திடுறாங்க. ஆனாக்கூட வயோதிக பிரச்னைகளால் எடுக்கிற மருந்து மாத்திரைகள் வாங்க என்கிட்ட பணம் இல்லை, நான் இங்க இப்படி இருக்கேன்னு ரஜினி சாருக்குச் சொல்லியிருக்காங்க. சில தினங்களுக்கு முன் அவர்கிட்ட இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் வந்தது. அதை வச்சு சமாளிச்சிட்டிருக்கேன் என்று மோகன் சர்மா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்