- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்குமாரின் அடுத்த படத்தில் இணையப் போகும் அந்தப் பிரபல நட்சத்திரம் இவர்தானா... அப்புறம் படப்பிடிப்புக்கும் நாள்...

அஜித்குமாரின் அடுத்த படத்தில் இணையப் போகும் அந்தப் பிரபல நட்சத்திரம் இவர்தானா… அப்புறம் படப்பிடிப்புக்கும் நாள் குறிச்சாச்சா…

- Advertisement -

இந்த ஆண்டு அஜித்குமாருக்கு இரண்டு திரைப்படங்கள் வெளியாகி விட்டன. இதில் பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அந்த திரைப்படம், பெரிய அளவு பேசப்படாததால் வசூலிலும் பாதிப்பை உண்டு பண்ணியது. இதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களிலேயே குட் பேட் அக்லி படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

ஆதிக் ரவிச்சந்திரன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாக அவர் விஷாலை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. ஏற்கனவே தன்னை அஜித் ரசிகர் என ஒவ்வொரு மேடையிலும் ஆதிக் ரவிச்சந்திரன் கூறி இருந்ததால், படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

- Advertisement -

ஆனால் குட் பேட் அக்லி படம் ரிலீசான பிறகு அது ரசிகர்களுக்கு மட்டுமே பிடிக்கும் வகையில் அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் படத்தின் வசூல் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டது. ரிப்பீட்டட் ஆடியன்ஸ்கள் அந்த திரைப்படத்திற்கு இருந்ததால், 300 கோடி ரூபாய் அளவுக்கு இந்த திரைப்படம் வசூல் செய்ததாக பேசுகிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு அஜித்குமார் முழுக்க முழுக்க கார்பந்தயத்தில் கவனம் செலுத்த சென்று விட்டார். இதற்காக அஜித்குமார் ரேசிங் கிளப் எனும் அணியையும் அவர் ஏற்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து வெளிநாடுகளில் நடைபெற்று வரும் பத்தயங்களில் அவர் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அண்மையில் துபாயில் நடைபெற்ற பந்தயத்தில் அவரது அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இதே போல் ஸ்பெயின் நாட்டின் பார்ஸிலோனாவின் நடைபெற்ற கார் பந்தயத்தின் ஒரு பிரிவிலும் அஜித் குமார் அணி வாகை சூடியது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி அவரை பாராட்டி இருந்தார். இப்படி இருக்க மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார் அஜித்குமார். அவரது அடுத்த திரைப்படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் ஹைதராபாத்தில் தொடங்குகிறதாம். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. அது மட்டுமல்ல, மலையாள நடிகர் மோகன்லாலும் இந்த திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். பொங்கல் பண்டிகைக்கு பிறகு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்