- Advertisement -
Homeபொழுதுபோக்குரோபோ சங்கர் குடும்பம் கடன் சுமையால் தத்தளிக்குது - சின்னத்திரை பிரபலம் சொன்ன பகீர் தகவல்!

ரோபோ சங்கர் குடும்பம் கடன் சுமையால் தத்தளிக்குது – சின்னத்திரை பிரபலம் சொன்ன பகீர் தகவல்!

- Advertisement -

பிரபல டிவி சேனல்களில் காமெடி நிகழ்ச்சிகளில் அறிமுகமானவர் ரோபோ சங்கர். நடிப்பு திறமை உழைப்பு நகைச்சுவை உணர்வால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். வாயை மூடி பேசவும் படத்தில் அறிமுகமான அவர் மாரி அண்ணாத்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் விஸ்வாசம் போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்தார்.

நடிகர் கமல் மீது அதிக பற்றுக்கொண்ட அவர் மக்கள் நீதி மய்யம் நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துக்கொண்டார். கடந்த வாரத்தில் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை வருத்தத்தை ஏற்படுத்தியது. அவரது நெருங்கிய நண்பர் சின்னத்திரை கலைஞர் நாஞ்சில் விஜயன் ஒரு நேர்காணலில் ரோபோ சங்கர் குறித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

அந்த நேர்காணலில் நாஞ்சில் விஜயன் கூறியதாவது, ரோபோ சங்கரின் உடல்நல பாதிப்புக்கு குடிப்பழக்கமும் ஒரு காரணமே தவிர அது மட்டுமே காரணம் இல்லை. ரோபோ சங்கர் ஆரம்பத்தில் மேடை கலைஞராக இருந்தபோது உடம்பில் பூசிக் கொண்டிருந்த பெயிண்ட், ஓயாது உழைப்பும் அவரது உடல் நலக்குறைவுக்கு காரணம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோபோ சங்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்கே சென்றார். ஆனால் அவரது மனைவி பிரியங்கா போராடி அவரை மீட்டு வந்தார். குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்த அவரை எந்த தொலைக்காட்சியும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று நடிக்க வாய்ப்பு தரவில்லை. சினிமாவில் டிவி நிகழ்ச்சிகளில் வாய்ப்பு இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக ரோபோ சங்கர் கடுமையான மனஅழுத்தத்தில் இருந்தார்.

- Advertisement -

சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு மட்டுமே மாதம் ஒரு லட்சம் ரூபாய் இஎம்ஐ கட்ட வேண்டும். இந்த சூழ்நிலையில் அவரும் ஓடி ஓடி உழைத்தார். இதுவும் அவரது உடல் நலம் பாதிக்க முக்கியமான காரணம். ரோபோ சங்கர் ஏற்கனவே மருத்துவமனையில் இருந்தபோது 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகிவிட்டது. அவ்வளவு பணத்தை செலவு செய்துதான் அவரது மனைவி பிரியங்கா அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட போது மருத்துவ செலவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

இந்திரஜா தாலி உட்பட அத்தனை நகைகளையும் மருத்துவமனையில் கழட்டி கொடுத்தார். இந்திரஜாவின் கணவர் கார்த்திக்கும் செயின் மோதிரம் என அனைத்தையும் கழட்டி கொடுத்து தான் மருத்துவ செலவு செய்யப்பட்டது. அனைத்தையும் அருகில் இருந்து கண்கூடாக பார்த்தேன். ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதற்காக அவர்களுக்கு எந்த விதமான பிரச்னையும் இல்லை என்று நினைக்க கூடாது. ரோபோ சங்கர் குடும்பம் மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறது என்று அந்த நேர்காணலில் நாஞ்சில் விஜயன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்