- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ் கே - ஏ ஆர் முருகதாஸ் இணையும் படத்திலிருந்து முக்கியமான அப்டேட் ரெடி... படத்தில்...

எஸ் கே – ஏ ஆர் முருகதாஸ் இணையும் படத்திலிருந்து முக்கியமான அப்டேட் ரெடி… படத்தில் இணையும் உச்ச நட்சத்திரம்…

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த இயக்குனர் கௌதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார். இவர் ஏ ஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றியவர். இப்படியான சூழலில் தான் தனது இரண்டாவது படத்திற்காக அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிந்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். படத்தில் வில்லனாக, விஸ்வரூபம் படத்தில் நடித்திருந்த ராகுல் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவ பின்னணியில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற நிலையில், அடுத்ததாக சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். இதற்கான வீடியோ நேற்று வெளியாகி இருந்தது. படத்தின் டைட்டில் தொடர்பான டீசரும், 16ம் தேதி வெளியாகிறது.

இதற்கு சோல்ஜர் என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதமே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான வேலைகள் தள்ளிப் போய் உள்ளன. இதனால் ஜூன் மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ஏ ஆர் முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார்.

- Advertisement -

இந்த திரைப்படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக மிருணால் தாகூர் நடிக்க இருக்கிறார். மேலும் துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய வித்யூத் ஜமால் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் கதை முதலில் நடிகர் விஜய்க்கு எழுதப்பட்டதாகவும், ஆனால் கடைசி நேரத்தில் விஜய் முருகதாஸ் கூட்டணி உறுதி செய்யப்படாததால் சிவகார்த்திகேயனுக்கு இந்த கதை சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க இருக்கிறாராம். தமிழில் முக்கியமான திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் அடித்து வரும் மோகன்லால், தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைய இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்