ஜெயிலர் 2 படத்தில் நடிகர் மோகன்லால் நடித்த படம் முக்கிய காட்சிகள் நீக்கப்பட்டதற்கு அவரது தனிப்பட்ட காஸ்ட்யூம் டிசைனர் ஜிஷாத் சாம்சுதீன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன். மோகன்லால் சார் போன்ற ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டாரின் காட்சிகளை இப்படி வெட்டி சுருக்குவது முற்றிலும் தேவையற்ற ஒன்று. அவரை திரையில் இப்படி சுருக்கப்பட்டதை பார்க்கும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒருவேளை ஜெயிலர் படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்பட்டால் அதில் நிச்சயமாக பங்கெடுக்க மாட்டேன். என் வேலையை நம்பிய அனைவருக்கும் மன்னிப்பு கேட்கிறேன். நான் எந்த லாபத்திற்காகவோ கோடிகளுக்காகவோ பிராண்டுகளுக்காகவோ கேட்கவில்லை. நான் மோகன்லால் அவருடைய ரசிகர்களுக்காக சினிமா கலைக்காக மட்டுமே நிற்கிறேன் என்று அதில் பதிவிட்டுள்ளார்.





