தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகர்ஜூனா. தமிழில் உதயம் இதயத்தை திருடாதே ரட்சகன் தோழா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்திலும் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் நாகர்ஜூனா வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
குபேரா படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகர் நாகர்ஜூனா, இந்த படத்தை பொருத்த வரை நான்தான் ஹீரோ. படத்தில் என் கேரக்டரை சுற்றி சுற்றியே கதை முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த கேரக்டரில் நடித்த போது என்னை நான் ஹீரோவாக தான் உணர்ந்து நடித்தேன் என்று கூறியிருந்தார்.
இது நடிகர் தனுஷ் ரசிகர்களை வெறுப்படைய செய்தது. படத்தின் ஹீரோ தனுஷ் என்கிற போது, வில்லனாக நடித்த அவர் எப்படி ஹீரோவாக முடியும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். நாகர்ஜூனா இப்படி பேசியது நடிகர் தனுஷூக்கே பிடிக்கவில்லை என்று இணையத்தில் தகவல் பரவியது. அதற்கேற்றது போல் தெலுங்கில் குபேரா பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தமிழில் பிளாப் ஆகி தனுஷ் ரசிகர்களை ஏமாற்றியது.
இப்போது கூலி படத்தின் பிரமோ நிகழ்ச்சியிலும் நடிகர் நாகர்ஜூனா இதே போல பேசியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் நாகர்ஜூனா கூறியதாவது, கூலி படத்தில் நான் ஹீரோவாகத் தான் நடித்திருக்கிறேன். கூலி படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை அணுகிய போது, நீங்க வில்லனாக நடிக்கிறீர்களா என்று கேட்டார்.
இல்லையென்றால் டீ குடிச்சிட்டு சினிமா பத்தி பேசலாம் என்று என்னிடம் சொன்னார். இந்த படத்தில் என் கேரக்டர் வில்லன் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படும் என்று நம்புகிறேன். இந்த படத்தில் ஹீரோ நான்தான். லோகேஷ் நெகட்டிவ் ரோல் கொடுத்தாலும் அது எனக்கு பாசிட்டிவ் அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று நாகர்ஜூனா கூறியிருக்கிறார்.
ஏற்கனவே நடிகர் தனுஷ் நடித்த குபேரா படத்தில் நான்தான் ஹீரோ என்று சொல்லி அவரை டம்மியாக்கிய நடிகர் நாகார்ஜூனா, இந்த முறை கூலி படத்திலும் நான்தான் ஹீரோ என்று சொல்லி ரஜினியை டம்மியாக்க பார்க்கிறாரா? இது எங்க தலைவரோட படம், இங்கெல்லாம் உங்க வாய்ஜாலம் எடுபடாது என்று சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.





