தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. தொட்டாச்சிணுங்கி என்ற படத்தில் அறிமுகமான அவர் காதல் கோட்டை சூரியவம்சம் நினைத்தேன் வந்தாய் பிரண்ட்ஸ் தொடரும் தெனாலி கும்மிப்பாட்டு நீ வருவாய் என போன்ற பல ஹிட் படங்களில் நடித்தவர். தமிழில் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு என பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர்.
இயக்குனர் இராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்டார் தேவயானி. இந்த நட்சத்திர தம்பதிக்கு இனியா பிரியங்கா என 2 மகள்கள் உள்ளனர். விரைவில் இனியா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். நடிகர் மற்றும் இயக்குனர் தியாகராஜன் இயக்கும் ஒரு புதிய படத்தில் அவர் நாயகியாக நடிக்க உள்ளார்.
நடிகை தேவயானியின் தம்பி நகுல். இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் காதலில் விழுந்தேன் மாசிலாமணி கந்தகோட்டை வல்லினம் பிரம்மா டாட் காம்
உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 1990களில் டாப் நடிகையாக வலம் வந்த நடிகை தேவயானி, இயக்குனர் ராஜகுமாரனை காதலித்தது தேவயானியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. பெற்றோர் எதிர்ப்பை மீறி தான் ராஜகுமாரனை தேவயானி கரம்பிடித்தார். இதனால் பல ஆண்டுகளாக அவரது பெற்றோர், குடும்பத்தினர் தேவயானியுடன் பேசாமல் விலகி இருந்தனர்.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு தேவயானி குடும்பத்துடன், அவரது பெற்றோர் குடும்பத்தினர் பிரிந்த உறவை தொடர்ந்தனர். தனது அக்கா தேவயானி மீது நடிகர் நகுல் அன்பாக இருக்கிறார். அக்கா மகள்களுடன் தாய்மாமன் நகுல் பாசமாக இருந்து வருகிறார். சமீபத்தில் தேவயானி பிறந்த நாளில் அக்கா தம்பி இருவரும் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் நடிகர் நகுல் ஒரு நேர்காணலில் கூறியதாவது, என்னுடைய அக்கா வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்ததால் நான் என் அக்காவை ஒதுக்கி விட்டேன் என்றும் என்னையும் என் அக்காவையும் என் மனைவி ஸ்ருதி பிரித்து விட்டார் என்றெல்லாம் சிலர் பேசுகின்றனர். இதை கேட்ட போது முதலில் எனக்கு பயங்கரமாக கோபம் வந்தது. இப்போது என்னடா சீரியல் மாதிரி பேசறீங்க என்றுதான் கேட்கத் தோன்றுகிறது என அந்த நேர்காணலில் நடிகர் நகுல் கூறியிருக்கிறார்.





