- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்துக்கு பிறகு விஜயுடன் நான் பேசுவதும் இல்லை, அவர் நடித்த படங்களை பார்ப்பதும் இல்லை...

அந்த படத்துக்கு பிறகு விஜயுடன் நான் பேசுவதும் இல்லை, அவர் நடித்த படங்களை பார்ப்பதும் இல்லை – நடிகர் நெப்போலின் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய் மட்டும்தான். அவரது படங்கள் சுமாராக இருந்தால் கூட பலமடங்கு லாபத்தை அள்ளித் தருகின்றன. அதனால் சூப்பர் கமர்ஷியல் ஹீரோவான அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்களும், அவரது படங்களை இயக்க இயக்குனர்களும் தீவிரம் காட்டுகின்றனர்.

ஆனால் திடீரென நடிகர் விஜய் அரசியல் களத்தில் குதித்து விட்டார். அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசுகையில், விஜய் அரசியலுக்கு வந்தது சந்தோஷமாக இருந்தாலும் இன்னும் பவுண்டேசனை ஆழமாக போட்டுவிட்டு சிறிது காலம் கழித்து வந்திருக்கலாம்.

- Advertisement -

ஏனென்றால் இப்போது அவர் சினிமாவில் கேரியரில் உச்சத்தில் இருக்கிறார். இவ்வளவு கஷ்டப்பட்டு இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்து விட்டு திடீரென மொத்தமாக அதை அப்படியே விட்டுவிட்டு அரசியலுக்கு செல்வது கஷ்டமாக உள்ளது. இந்த இடத்தை பிடிக்கத் தானே சினிமாவில் அவர் அவ்வளவு கஷ்டப்பட்டார் என்றும் வருத்தப்பட்டு இருந்தார்.

இது விஜயின் அப்பாவின் ஆதங்கம் மட்டுமல்ல, விஜய் ரசிகர்களின் ஏக்கமும் அதுவாக தான் இருக்கிறது. அரசியலில் இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு படம் நடியுங்கள் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து விஜய்க்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். வருகிற 2026ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் மீண்டும் விஜய் நடிக்க வந்துவிடுவார் என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் நாயகன் வில்லன் குணச்சித்திரம் என பலவித நடிப்பிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் நெப்போலியன். இப்போது அமெரிக்காவில் செட்டிலாவிட்டார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் நெப்போலியன், போக்கிரி படத்துக்கு பிறகு நடிகர் விஜயுடன் நான் பேசுவதில்லை, அவர் நடித்த படங்களையும் பார்ப்பது இல்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் விஜய் அசின் நடித்த போக்கிரி படத்தில், போலீஸ் கமிஷனராக நெப்போலியன் நடித்திருந்தார். இந்த படம் ஷூட்டிங் நடந்த போது, விஜய் இருந்த கேரவனுக்குள் நெப்போலியன் ரசிகர்கள் சிலரை அனுமதியின்றி அழைத்துச் சென்றதால், அவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் அதில் இருந்து இருவரும் தங்களது நட்பை முறித்துக் கொண்டதாகவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் தகவல் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்