- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதன்முறையாக தன் மனைவி குறித்து மௌனம் கலைத்த நடிகர் விஜய், வரும் 20ம் தேதி விவாகரத்து...

முதன்முறையாக தன் மனைவி குறித்து மௌனம் கலைத்த நடிகர் விஜய், வரும் 20ம் தேதி விவாகரத்து வழக்கு விசாரணை – திக் திக் என காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி தனது கணவர் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை விஜய் மீது சங்கீதா கூறியிருந்தார். விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவகாரத்து கேட்ட தகவல் தமிழ் சினிமா ரசிகர்கள், தவெக கட்சியினர் தொண்டர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த மனுவில், தனது கணவர் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது, தனக்கு 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிய வந்தது. நான் அதை கண்டுபிடித்த பிறகும் அந்த நடிகையுடன் உறவை விஜய் தொடர்ந்து வந்தார். இதையடுத்து நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை முறித்துக் கொள்வதாக அவர் என்னிடம் உறுதியளித்தார். ஆனால் சொன்னதைப் போல் விஜய் நடக்காமல் அந்த நடிகையுடன் மீண்டும் உறவை தொடர்ந்தார்.

- Advertisement -

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டதோடு விஜயால் மிகவும் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் இரக்கமே இல்லாமல் அந்த நடிகையுடன் உறவை விஜய் தொடர்ந்தார். திருமணத்தை மீறிய இந்த உறவால் 2021ம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அதேபோல் இதனை தட்டிக் கேட்டதால் விஜய் எனக்கான உரிமைகளையும் நிறுத்தி விட்டார் என்றும் அந்த மனுவில் சங்கீதா குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கிடையே நடிகை திரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் ஒரே காரில் திருமண விழா ஒன்றில் நடிகர் விஜய் பங்கேற்றார். அதேபோல் விஜய் திரிஷா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு பதிவுக்கு திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் லைக் செய்து இருந்தார். இதனால் தவெக தொண்டர்கள் பலரும் பலத்த விரக்தி அடைந்தனர். இந்த சூழ்நிலையில் நெல்லையில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் மனைவி சங்கீதாவின் பெயரை குறிப்பிடாமல் நடிகர் விஜய் பேசி இருக்கிறார்.

- Advertisement -

அப்போது விஜய் பேசுகையில், திமுக நம் மீது தொடர்ந்து எவ்வளவு அவதூறுகளை பரப்புகிறார்கள். அவர்களையும் தாண்டி இன்னும் சில பேர் அவதூறு பரப்பினார்கள். நம்மை சுற்றி இருப்பவர்களை வைத்து இத்தனை வருஷமாக காத்திருந்து தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன்பு நேரம் பார்த்து அவதூறு பரப்பினார்கள். அது என்னவென்று உங்களுக்கே தெரியும். அதுவும் மக்களிடம் எடுபடவில்லை. எத்தனை சோதனைகளை கொடுத்தாலும் திமுக பாஜக மற்றும் பலர் யாராலும் எதுவும் என்னை செய்ய முடியாது.

மக்கள் எப்போதும் என் பக்கம்தான் நிற்கிறார்கள். எவ்வளவு அவதூறு பரப்பினாலும் மக்கள் சக்தியுடன் இருக்கும் என்னை அவர்களால் எதுவுமே செய்ய முடியாது என்று நடிகர் விஜய் ஆவேசமாக அந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார். இதற்கிடையே வரும் 20ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் நேரில் ஆஜராக உள்ளார். தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு 3 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருவதும் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்