- Advertisement -
Homeபொழுதுபோக்குபைக்கில் டூர் போன இடத்திலும் வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டாரே? - வைரலாகும் அஜீத்குமார் வீடியோ

பைக்கில் டூர் போன இடத்திலும் வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டாரே? – வைரலாகும் அஜீத்குமார் வீடியோ

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்து வந்த விடாமுயற்சி படம் பிரேக் ஆகி விட்டது. மீண்டும் அந்த படம் விட்ட இடத்திலிருந்து தொடருமா, அல்லது அப்படியே கிடப்பில் போடப்படுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. வேட்டையன் படத்தை முடித்த பிறகுதான், விடாமுயற்சி பற்றி யோசிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா புரக்டக்சன் சொல்லி விட்டது.

அதே நேரத்தில், அஜீத்குமார் படங்களை ஏற்கனவே தயாரித்தவரும், அவரது நெருங்கிய நண்பருமான, திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் விடாமுயற்சி படத்தை வாங்கி, படப்பிடிப்பை துவங்கவும் வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது. ஆனால் இதில் எதுவுமே உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் அஜீத்குமாருக்கு திடீரென மூளையில் இருந்து காது பகுதிக்கு செல்லும் நரம்பில் வீக்கமும், கட்டியும் இருந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு அஜீத்குமார் ஓய்வில்தான் இருந்தார்.

இந்நிலையில் திடீரென தனது நண்பர்களுடன் பைக் டூர் கிளம்பி விட்டார். அவருடன் பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் நடிகர் ஆரவ்வும் உடன் சென்றிருக்கிறார். விடாமுயற்சி படத்தில் வில்லன் குரூப்பை சேர்ந்த ஒருவராக நடித்த வகையில், ஆரவ் அஜீத்குமாரின் நெருங்கிய நண்பராகி விட்டார். அதனால் இந்த முறை அஜீத்குமார் பைக் ரைடில் ஆரவ்வும் இணைந்து விட்டார். வழக்கமான பைக் ரைடு நண்பர்களும் அஜீத்குமாருடன் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.

- Advertisement -

கடந்த சில தினங்களாக அஜீத்குமார் தன் நண்பர்களுடன் பைக் டூர் சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சக பைக் ரைடர் ஒருவருக்கு பைக் ஆக்ஸிலேட்டரை திருகி ஓட்டுவது குறித்து அஜீத்குமார் டிப்ஸ் தருவது போன்ற வீடியோ காட்சி நேற்று வைரலானது.

இப்போது பைக் டூர் சென்ற இடத்தில் நடிகர் அஜீத்குமார் தனக்காகவும், தன்னுடன் பயணித்த சக பைக் ரைடர்களுக்காகவும் ஓரிடத்தில் வெட்டார வெளியில், காஸ் சிலிண்டர் அடுப்பில் பெரிய பாத்திரங்களை வைத்து பிரியாணி சமைக்கிறார். மசாலா அயிட்டங்களை பாத்திரத்தில் போட்டு தாளிப்பது, பிரியாணியை கிண்டி கிளறிவிடுவது வரை அந்த வீடியோவில் காணப்படுகிறது. அருகில் இருக்கும் பைக் ரைடர்கள் ஆர்வமாக காத்திருக்க, சந்தோஷமாக பேசியபடி அஜீத்குமார் பிரியாணி சமைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்