- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தை பார்த்த யாருமே என்னை பாராட்டலே, அவரை அப்படியே பார்த்தேன்னு சொல்லி அழுதாங்க...

அந்த படத்தை பார்த்த யாருமே என்னை பாராட்டலே, அவரை அப்படியே பார்த்தேன்னு சொல்லி அழுதாங்க – நடிகர் நாசர் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷ நடிகர்களில் ஒருவராக நடிகர் நாசரை தாராளமாக சொல்லலாம். ஹீரோ வில்லன் குணச்சித்திரம் காமெடி என எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அவரால் அந்த கேரக்டராகவே மாறி மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும். நடிகர் கமல்ஹாசனே அசந்து போன சமகால நடிகர் ஒருவர் என்றால் அது நடிகர் நாசர்தான்.

அதனால்தான் கமல்ஹாசன் தனது பெரும்பாலான படங்களில் நடிகர் நாசரை நடிக்க வைத்திருப்பார். குறிப்பாக தேவர் மகன் படத்தில் மாயன் கேரக்டரில் நாசரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்தளவுக்கு படம் மூர்க்கத்தனமாக இருந்திருக்காது. மகளிர் மட்டும் படத்திலும் 3 பெண்களை கலாய்க்கும் ஒரு பிளேபாய் கேரக்டரிலும் நாசரை கமல் நடிக்க செய்திருந்தார்.

நாசர் நாயகனாக நடித்த முகம், தேவதை, அரிதாரம், மாயன் போன்ற பல படங்களில் அவரது தனிப்பட்ட நடிப்பை மிக அற்புதமாக ரசிக்க முடியும். அதே நேரத்தில் ஜீன்ஸ் படத்தில் நாச்சியப்பன் பேச்சியப்பன் என்ற 2 ரோல்களில் ஒருவர் வீம்புக்காரராகவும், ஒருவரை மனைவிக்கு பயப்படும் கோழையாகவும் நாசரை நடிக்க வைத்து ஷங்கர் அசத்தியிருப்பார்.

நாசர் நடித்த பல படங்களில், மெட்டிஒலி, நாதஸ்வரம் சீரியல் இயக்குனர் திருமுருகன் இயக்கிய எம்டன் மகன். எம்மகன் என்ற டைட்டிலில் வெளியானது. நாசர், சரண்யா பொன்வண்ணன் மகனாக பரத் நடித்திருந்தார். அவரது முறைப்பெண்ணாக கோபிகா, மாமாவாக வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் மளிகை ஸ்டோர் நடத்தும் நாசர், குடும்பத்தை பயங்கரமாக மிரட்டுவார். மனைவி, மகன் அவரை பார்த்தாலே நடுங்கும் அளவுக்கு முரட்டு சுபாவத்தில் இருப்பார்.

ஒரு காட்சியில் மகன் பரத்தை கோழிக்கறி சாப்பிடச் சொல்லி அடித்து உதைப்பார். 500 ரூபாய் பணத்தை காணவில்லை என பரத்தை அடிப்பார். எப்போதுமே மகன் மீது ஒருவித காழ்ப்புணர்ச்சி கோபத்துடன் நாசர் நடித்திருப்பார். இந்த கேரக்டர் குறித்து ஒரு நேர்காணலில் நடிகர் நாசர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

நடிகர் நாசர் கூறுகையில், இதுவரை 40 ஆண்டுகளில் 700 படங்களில் நடித்திருக்கிறேன். என் படங்களை பார்த்த பலரும், அந்த கேரக்டரில் நன்றாக நடித்திருந்தீர்கள் என பாராட்டுவார்கள். ஆனால் எம்மகன் படம் பார்த்த யாரும் என்னை பாராட்டவில்லை. அதற்கு பதிலாக 100ல் 95 பேர் எங்க அப்பாவை பார்த்த மாதிரியே இருந்தது என வேறு மாதிரியாக கூறி பாராட்டினர். சிலர் என்னிடம் அழுது விட்டனர். ஆனால் இந்த பாராட்டு புகழ் எல்லாம் இயக்குனர் திருமுருகனுக்குதான். அவர்தான் அந்த கேரக்டரை அவ்வளவு ஆழமாக அழுத்தமாக என்மூலம் கொண்டுவந்தார், என்று நாசர் கூறியிருக்கிறார்.

சற்று முன்