- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விளம்பரம் மட்டும் இல்லேன்னா, எனக்கு இந்த படத்துல அவ்வளவு பேரு கிடைச்சிருக்காது - இப்படி...

அந்த விளம்பரம் மட்டும் இல்லேன்னா, எனக்கு இந்த படத்துல அவ்வளவு பேரு கிடைச்சிருக்காது – இப்படி ஒரு முக்கிய தகவலை சொன்ன மாஜி ஹீரோ

- Advertisement -

சினிமா ரசிகர்கள் மத்தியில், சில படங்கள் மட்டுமே எப்போதும் பரபரப்பாக ரசிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் கேஜிஎப். யாஷ் ஹீரோவாக நடித்த இந்த படம், பான் இந்தியா படமாக, மாபெரும் வெற்றிப் பெற்று வசூலை குவித்தது. கோலார் கோல்டன் பிஷ் என்பதே கேஜிஎப் என்பதன் விரிவாக்கம்.

தங்கச் சுரங்கத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்யும் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் கதாநாயகனின் கதைதான் இது. முதல் இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த படத்தின் தொடர்ச்சியாக, 3ம் பாகம் எடுக்கப்படுகிறது. அடுத்த ஆண்டில் நவம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

- Advertisement -

இந்தியாவில், 10 நாட்கள் மட்டுமே எடுக்கப்படும் கேஜிஎப் 3 அதன்பிறகு அமொிக்கா, லண்டன் என 16 நாடுகளில் படம் எடுக்கப்பட உள்ளதாகவும், இந்த படத்தில், இன்டர்நேஷனல் தாதா வாக மாறும் யாஷ், வழக்கம்போல பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டும் விதமாக, கதை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக, இப்போதே தாடி, மீசை, தலைமுடி வளர்க்க துவங்கி இருக்கிறார் யாஷ் என்ற தகவலும் உள்ளது.

இந்நிலையில், கேஜிஎப் படங்களில், பின்னணியில் ஒலித்த அந்த கம்பீர குரல், நடிகர் நிழல்கள் ரவிக்கு சொந்தமானது என்பது, பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியும். தமிழ் சினிமாவில், நிழல்கள் படம் மூலம் அறிமுகமான நிழல்கள் ரவி ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து அசத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி, அவர் மிகச்சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவர் அமிதாப் பச்சனுக்கே பின்னணி குரல் கொடுத்தவர். மேலும் பல படங்களில் பல முக்கிய நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்து வரும் நிலையில், கேஜிஎப் படத்தில், பின்னணி குரல் கொடுத்த சுவாரசியமான தகவலை இப்போது நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார் நிழல்கள் ரவி.

கேஜிஎப் படத்துக்கு யாரை பின்னணி குரல் கொடுக்க வைப்பது என, அந்த படத்தின் பொறுப்பாளர் அசோக்குமாருக்கு பல நாட்களாக குழப்பம் இருந்திருக்கிறது. ஒருநாள் டென்சனை குறைக்க மனைவியுடன் சினிமாவுக்கு சென்ற அவர், அங்கு தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பர படத்தை பார்த்திருக்கிறார். அதில் பின்னணியில் ஒலித்த என் குரலை கேட்டு, அசந்துபோய் சந்தோஷப்பட்ட அவர், அப்போதே தியேட்டரை விட்டு வெளியே ஓடிவந்து என்னிடம் போனில் பேசினார். அதன்பிறகு கேஜிஎப் படத்தில், நான் பின்னணி பேசினேன் எனக் கூறியிருக்கிறார் நிழல்கள் ரவி.

- Advertisement -

சற்று முன்