- Advertisement -
இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சினிமாவில் முழு கவனமும் இருக்கணும், திருமணம் செய்தால் கவனம் திசைமாறிடும் என்று ஆரம்பத்திலேயே விவேகானந்தர் போல துறவியாக வாழக ஆசைப்பட்டேன். எனக்கு வங்கியில் அப்போது கணக்கு இல்லை. அதனால் என் உதவியாளரிடம் 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து வைத்தேன். அடிக்கடி செலவுக்கு பணம் வாங்குவேன். அப்படி பார்த்தால் 10 நாட்களுக்கு பிறகு 1750 ரூபாய்தான் மிச்சம் இருந்தது. அடடே இது ரொம்ப தப்பாச்சே? இத்தனை பணம் செலவு செய்யக் கூடாதே என்று யோசித்த போதுதான் திருமணம் செய்வதே நல்லது என்ற முடிவுக்கு வந்தேன் என்று கூறியிருக்கிறார்.





