தமிழ் சினிமாவில் கிராமிய கதைகளை படமாக்கிய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் கஸ்தூரி ராஜா. என் ராசாவின் மனசிலே, எட்டுப்பட்டி ராசா, கரிசக்காட்டு பூவே, வீரத்தாலாட்டு, கும்மிப்பாட்டு, என் ஆச ராசாவே, வீரம் வௌஞ்ச மண்ணு, நாட்டுப்புறப்பாட்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். இதில் பல படங்கள் வெற்றிப் படங்களாக கொண்டாடப்பட்ட படங்களா இருந்தன.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன்கள்தான் செல்வராகவன் மற்றும் தனுஷ். இயக்குனராக நடிகராக செல்வராகவன் அசத்திக்கொண்டு இருக்கிறார். அதேபோல் நடிகர் தனுஷூம் இப்போது நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தமிழ் சினிமாவில் முக்கிய ஆளுமையாக வலம் வருகிறார். அதே நேரத்தில் கஸ்தூரி ராஜாவும் இப்போது ஒரு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம் 2 பாகங்களாக உருவாக இருக்கிறது. இதில் இளையராஜா கேரக்டரில் நடிக்கப் போவது கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் தனுஷ்தான். ஆனால் இளையராஜாவை பார்க்கச் சென்ற இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு, இசைஞானி அலுவலகத்தில் பெருத்த அவமானம் நேர்ந்துள்ளது.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியதாவது, இளையராஜா இசையில் ஒரு படத்தை எடுப்பதற்காக அவரை சந்திக்க அலுவலகத்துக்கு போனேன். ஆனால் அவரது அலுவலக வாசலில் உள்ள செக்யூரிட்டி என்னை உள்ளே விட மறுக்கிறார். நான் டைரக்டர் என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறார். 6 படங்களை அப்போது நான் டைரக்ட் செய்திருக்கிறேன்.
ஆனால் இளையராஜாவை பார்க்க என்னை உள்ளே விட மாட்டேன் என்கிறார்கள். இல்லப்பா நான் டைரக்டர் பா, அவர் கூடயே நான் படம் பண்ணியிருக்கேன் என்று சொன்னாலும் அந்த செக்யூரிட்டி கேட்க மறுக்கிறார். இப்படிதான் எல்லோரும் சொல்லிட்டு நிற்கிறானுக என்று அவர் பதிலுக்கு சொன்னார்.
அப்போது நடிகர் பார்த்திபன் அங்கே உள்ளே இருந்தார். அப்போது அவர் படத்தின் ரெக்கார்டிங் ஏதோ நடக்கிறது. அப்போது அங்கு வந்த பார்த்திபன், என்னய்யா நீ, டைரக்டரை போய் உள்ளே விடாமல் தடுக்கறே என்று செக்யூரிட்டியை திட்டிவிட்டு, நீங்க அவனுக்கு எல்லாம் எதுக்கு பதில் சொல்றீங்க என்று கேட்டுவிட்டு என்னை உள்ளே அழைத்துச் சென்றார். பிறகு இளையராஜாவை பார்த்து பேசிய பின், அவரது இசையில் நாட்டுப்புறப்பாட்டு என்ற படத்தை எடுத்தேன் என்று இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியிருக்கிறார்.





