- Advertisement -
Homeபொழுதுபோக்குகவிஞர் சினேகன் மனைவியுடன் சேர்ந்து ஆரம்பித்த புதிய தொழில்; கவிஞருக்கு திடீருன்னு என்னாச்சு? -...

கவிஞர் சினேகன் மனைவியுடன் சேர்ந்து ஆரம்பித்த புதிய தொழில்; கவிஞருக்கு திடீருன்னு என்னாச்சு? – புலம்பும் ரசிகர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி கவிஞராக கவிஞர் சினேகன் இருந்து வருகிறார். நல்ல வரிகளை கொண்ட சிறந்த பாடல்களை எழுதக்கூடிய கவிஞராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இதுவரை 2,500 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். தமிழ் சினிமாவில் சினேகனின் ஏராளமான பாடல்கள் சூப்பர் ஹிட்டாக இருந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல பேருக்கு அது சினேகன் எழுதிய பாடல் என்பது தெரியாது.

கவிஞர் சினேகனை பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சிதான். பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல், சினேகன் கலந்து கொண்டு, தமிழக மக்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தைப் பெற்றார். இந்த போட்டியில் சினேகன் தான் டைட்டில் வின்னர் என்று மக்கள் பரவலாக எதிர்பார்த்த நிலையில், ஆரவ் முதலிடம் பெற்றார். சினேகன் இரண்டாமிடம் பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன், கமல்ஹாசன் மீது கொண்ட அதிகப்பற்று காரணமாக, அவரது மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சினேகன். அதன்பிறகு கன்னிகா என்ற நடிகையை அவர் காதல் திருமணம் செய்து கொண்டார். கன்னிகாவும் சினேகனும் 10 ஆண்டுகளுக்கு மேல் காதலித்த நிலையில், அவர்கள் திருமணம் நடந்தது.

கன்னிகாவும் பிரபல நடிகைதான். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற சீரியலில் நடித்திருந்தார். தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படங்களிலும் கன்னிகா நடித்திருக்கிறார். இது தவிர சில சீரியல்களிலும் அவர் நடித்துள்ளார். சினேகனுக்கும், கன்னிகாவுக்கும் பத்து வயது வித்தியாசம் என்று சிலர் விமர்சித்தாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர்கள் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில், ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் சினேகன் நடித்திருந்தார். இப்போதும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அது தவிர கன்னிகா யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் சினேகன், அவரது மனைவி கன்னிகா இருவரும் சினேகன் ஹெர்ப்ஸ் என்ற பெயரில் ஹெல்த் கேர் ஆயில் என்ற பிராண்டட் எண்ணெய் விற்பனை தொழிலை தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அந்த ஆயில் விலையை பார்த்ததும் தான் பலத்த அதிர்ச்சியாகின்றனர். அதற்கு காரணம் 200ml ஆயிலின் விலை 999 ரூபாய். அதாவது 100 மில்லி ஆயில் 500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுவது ரசிகர்களை புலம்ப வைத்திருக்கிறது. கவிஞர் ஏன் இந்த தொழிலை தேர்ந்தெடுத்தார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சற்று முன்