- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் பேசறதை எங்க அப்பா கிண்டல் செய்வார், விஜயகாந்துக்கு அது சுத்தமா வராது - வெளிப்படையாக...

ரஜினிகாந்த் பேசறதை எங்க அப்பா கிண்டல் செய்வார், விஜயகாந்துக்கு அது சுத்தமா வராது – வெளிப்படையாக பேசிய நடிகர் பார்த்திபன்!

- Advertisement -

இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணி செய்தவர் பார்த்திபன். தனது தாவணி கனவுகள் படத்தில் பார்த்திபனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடிக்கும் வாய்ப்பை தந்தவர் கே பாக்யராஜ். அதன்பிறகு புதிய பாதை படம் மூலம் இயக்குனராகவும் ஹீரோவாகவும் பார்த்திபன் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

தொடர்ந்து நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக வலம் வரும் பார்த்திபன், புதிய பாதை படத்தில் நாயகியாக நடித்த சீதாவையே காதல் மணம் செய்துக்கொண்டார். ஆனால் 10 ஆண்டுகளில் அவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். சீதாவை பிரிந்த பிறகு பார்த்திபன் மறுமணம் செய்துக்கொள்ளவில்லை.

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் கே பாக்யராஜ் மறைவின் போது மிகவும் உடைந்து போனவர் நடிகர் பார்த்திபன். தனது குருநாதரின் இறுதி சடங்கு நிகழ்வுகளில் அனைத்தையும் முன்னால் நின்று கவனித்தவர் பார்த்திபன்தான். அவருடன் நடிகர் சரத்குமாரும் இருந்து எல்லா விஷயங்களையும் கவனித்துக்கொண்டார். ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜின் நெருக்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் பாக்யராஜ் தனது குருநாதர் புகைப்படத்துக்கு பேனா மாலை அணிவித்து அவரை கௌரவப்படுத்தினார். மேலும் அவரது பேப்பர் பேடு பேனாவை கே பாக்யராஜின் கையெழுத்துடன் அவரது இறுதி சடங்கில் இடம்பெறச் செய்து அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார். மேலும் எழுத்தாளர் சங்க புதிய கட்டிடத்துக்கு கே பாக்யராஜ் பெயரும், தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் நிரந்தர கௌரவ தலைவர் கே பாக்யராஜ் என்று முடிவும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, எங்க வீட்டில் தெலுங்குல தான் எப்பவும் பேசுவோம். தெலுங்கு தவிர வேறு எதுவும் பேசக்கூடாது. ஆனால் தமிழ் பேசுறவங்களை விட நான் நல்லா தமிழ் பேசுவேன். ஏன்னா நீ சினிமாவுல நடிக்க போனா தமிழை சரியாக பேசணும்ன்னு எங்க அப்பா சொல்லுவார்.

ரஜினி சார் நடிக்க வந்த புதுசுல அவர் பேசுற தமிழ் நிறைய பேருக்கு புரியாது. எங்க அப்பா அதை கிண்டல் பண்ணுவார். அதே மாதிரி விஜயகாந்த் சாருக்கு கூட வல்லினம் மெல்லினம் வராது. இதெல்லாம் உதாரணம் காட்டி நீ இப்படி எல்லாம் இருக்க கூடாது. நீ போனா தமிழ்ல எந்த தப்பும் வரக்கூடாதுன்னு சொல்லி சொல்லியே நானே என்னை திருத்திக்கிட்டேன் என்று நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்