- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதற்காக அடம்பிடித்தால் சினிமாவில் நான் நடிக்க முடியாது, முதலில் எனக்கு தேவை பணம்தான்… - ஓபனாக...

அதற்காக அடம்பிடித்தால் சினிமாவில் நான் நடிக்க முடியாது, முதலில் எனக்கு தேவை பணம்தான்… – ஓபனாக பேசிய நடிகர் சத்யராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக நடித்து இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் சத்யராஜ். புரட்சித் தமிழன் என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. ஆனால் பாகுபலி படத்தில் கட்டப்பா கேரக்டரில் நடித்த பிறகு சத்யராஜை பலரும் கட்டப்பா என்றே செல்லமாக குறிப்பிடுகின்றனர். அந்த கேரக்டரில் வாழ்ந்திருந்தார் சத்யராஜ்.

ஆரம்பத்தில் ஆன்மிக நாட்டம் கொண்டவராக வளர்ந்தவர்தான் சத்யராஜ். கோவில்களுக்கு செல்லுதல் முடிகாணிக்கை செய்தல் விபூதி பூசுதல் என கடவுள் நம்பிக்கையாளராக இருந்த சத்யராஜ், சினிமாவில் நடிகரான பிறகு நாத்திகவாதியாக மாறினார். சினிமா துறை சார்ந்த நண்பர்கள் மணிவண்ணன் வேலு பிரபாகரன் போன்றவர்களின் நட்பு சத்யராஜை கடவுள் மறுப்பாளராக மாற்றிவிட்டது.

கருணாநிதி கதைவசனம் எழுதிய பாலைவனச்சோலை படத்தில் நடித்த பிறகு நடிகர் சத்யராஜ், திமுகவுடன் அதிக நெருக்கம் காட்டினார். திராவிட இயக்க கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். குறிப்பாக பெரியார் படத்தில் ஈவே ராமசாமி கேரக்டரிலும் நடிகர் சத்யராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சினிமாவில் நடிக்கும் போது தனது கொள்கைகளை சிறிதும் சத்யராஜ் கண்டுகொள்வது இல்லை. படம் முழுக்க விபூதி பூசிக்கொண்டு கடவுள் பக்தி மிக்கவராகவும் மூட நம்பிக்கைகள் என்று சொல்லப்படும் காட்சிகளிலும் தாராளமாக சத்யராஜ் நடித்துவிட்டு போய்விடுவார். சமீபத்தில் கூட பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பிரதமர் மோடி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பேன் என்று சத்யராஜ் கூறியிருக்கிறார்.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், ஹரிஹர வீரமல்லு என்ற படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். தீவிர இந்துத்துவா ஆதரவாளராக உள்ள பவன் கல்யாண் படத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருப்பது குறித்து பலவிதமான விமர்சனங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன. இதற்கு முன் பிரபாஸ் நடித்த ராதே ஷியாம் படத்தில் சத்யராஜ் ஜோசியராக நடித்திருக்கிறார்.

இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், என்னுடைய நிஜமான கொள்கைகளின் படி படத்தில் நடிப்பேன் என்று நான் அடம்பிடித்தால், வருஷத்துக்கு நான்கைந்து படங்களில் கூட நடிக்க முடியாது. சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு. இது நடிப்பு. அதனால் என்னை தேடி வரும் கேரக்டர்களில் நான் நடித்துக்கொண்டு இருக்கிறேன் என்று வெளிப்படையாக சத்யராஜ் கூறியிருக்கிறார். கொள்கைக்காக அடம்பிடித்தால் படங்களில் நடிக்கவும் முடியாது, வருமானமும் கோடிக்கணக்கில் கிடைக்காது என்பதை நடிகர் சத்யராஜ் ஒத்துக்கொண்டிருக்கிறார்.

சற்று முன்