- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது அவருக்கு அவசியமே இல்லை, பின்வாங்கி விடுவாரா என சந்தேகமாக உள்ளது - நடிகர்...

அது அவருக்கு அவசியமே இல்லை, பின்வாங்கி விடுவாரா என சந்தேகமாக உள்ளது – நடிகர் விஜய் குறித்து பேசிய நடிகர் பார்த்திபன்!

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நடிகர் பார்த்திபன். பிறகு புதியபாதை படம் மூலம் தமிழ் சினிமா இயக்குனராக அறிமுகமானார். ஏற்கனவே தாவணி கனவுகள் என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் போஸ்ட்மேன் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை இயக்குனர் கே பாக்யராஜ் அவருக்கு கொடுத்தார்.

எதிலுமே வித்யாசமான சிந்தனை, செயல்களில் வித்யாசம் காட்டும் நடிகர் பார்த்தின், ஒத்த செருப்பு இரவின் நிழல் போன்ற தொழில்நுட்பத்தில் வித்யாசமான படங்களை தந்தவர். இவர் எழுதிய கிறுக்கல்கள் கவிதை நூலை ஒரு சினிமா விழா போல மிக பிரமாண்டமாக நடத்தியவர். அந்த நூலை அன்றைய முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

- Advertisement -

இப்போதும் தமிழ் சினிமாவில் நடிகராக இயக்குனராக பிஸியாக இயங்கிக்கொண்டு இருக்கும் பார்த்திபன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகர் விஜய் அரசியல் கட்சி பிரவேசம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பார்த்திபன் வெளிப்படையாக பதில் தந்திருக்கிறார்.

நடிகர் பார்த்திபன் கூறியதாவது, நான் அனைத்தையும் நேர்மறையாக பார்ப்பேன். நண்பர் விஜய்க்கு அரசியல் அவசியமே இல்லை. இப்போது அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பெரிய ராஜாங்கம் நடத்தி வருகிறார். சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் அவர்தான். கலெக்சன் மன்னனாக இருக்கிறார். 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு சிம்மாசனத்தை விட்டுவிட்டு அவர் எதற்கு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க அரசியலுக்கு வர வேண்டும். அப்படி என்றால் அவர் மக்களுக்கு ஏதோ நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரை தடுத்து நிறுத்து நிறுத்துவதற்கு பதிலாக நாம் சப்போர்ட் பண்ணிவிடலாம். மாறுதல் ஒன்றே மாறாதது. கடைசி வரைக்கும் இவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும். இவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது.

யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஏற்கனவே சில நடிகர்கள் அரசியலுக்கு வந்து பின்வாங்கி விட்டனர். அதனால் விஜயும் பின்வாங்கி விடுவாரோ என்ற சந்தேகம் உள்ளது. இருந்தாலும் அந்த சந்தேகத்தை ஊதி பெரிதாக்கி நல்லது செய்ய வருபவரை நாம் ஏன் பயமுறுத்த வேண்டும், அதனால் விஜய் முனைப்புடன் அரசியலில் செயல்படட்டும் என்று நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்