- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவை விட்டு கண்காணா இடத்துக்கு போய்விடலாம், நடிகர் பார்த்திபன் எடுத்த அதிரடி முடிவு - ஆனா...

சினிமாவை விட்டு கண்காணா இடத்துக்கு போய்விடலாம், நடிகர் பார்த்திபன் எடுத்த அதிரடி முடிவு – ஆனா இப்போ நான் அழுவறேன்னு அவரே சொல்றாரே?

- Advertisement -

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். சில நல்ல படங்களை இயக்கிய டைரக்டராகவும் இருக்கிறார். குறிப்பாக ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற வித்யாசமான படங்கள் பார்த்திபனுக்கு பெரிய அளவில் பாராட்டை பெற்றுத் தந்தன.

நடிகராகவும் பார்த்திபன் பல படங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி கட்டு, ஹவுஸ்புல், ஆயிரத்தில் ஒருவன், புதிய பாதை, பொண்டாட்டி தேவை, நீ வருவாய் என உள்ளிட்ட பல படங்களில் பார்த்திபன் நல்ல நடிகராக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 வெளியான அதே நாளில் பார்த்திபன் இயக்கி நடித்த டீன்ஸ் படம் தியேட்டர்களில் வெளியானது. 750 தியேட்டர்களில், தமிழகம் முழுவதும் இந்தியன் 2 ரிலீஸ் ஆன நிலையில், பார்த்திபனின் டீன்ஸ் படத்துக்கு குறைவான திரைகளே கிடைத்திருக்கின்றன. இருப்பினும், அவரது படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் இதுவரை வரவில்லை.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் கார்த்தி நடித்த ஜப்பான் படம், மொக்கையாக இருந்ததால், அந்த படம் பார்க்க வந்த ரசிகர் கூட்டம் முழுவதும் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்துக்கு சென்றது. அதுபோன்ற ஒரு வாய்ப்பு இந்தியன் 2 படத்துடன் ரிலீஸ் ஆன பார்த்திபன் நடித்த டீன்ஸ் படத்துக்கு கிடைத்துள்ளது.

- Advertisement -

தனது டீன்ஸ் படம் குறித்து பதிவிட்டுள்ள நடிகர் பார்த்திபன், பிரண்ட்ஸ், சத்தியமா சொல்றேன். டீன்ஸ் படத்துக்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களில் இருந்து கிடைக்கலைன்னா, நான் மிகவும் நேசித்த உயிராக சுவாசித்த சினிமாவை விட்டு விலகி, கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போய்விட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லோரும் ஒரு முகமா கொடுக்கற பாராட்டுல நான் ஓ ன்னு சந்தோஷத்துல அழுவறேன்.

நான் அழுவறது உங்களுக்கு கேக்க வாய்ப்பில்லை. இது போதாது. இன்னும் ஆதரவு தந்து பலரும் பார்க்க உதவி செய்து என்னை சந்தோஷத்தில் சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும்படியும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக சயின்ஸ் பிக்சன் அண்ட் பேண்டஸி தாட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பள்ளிகள், கல்லூரிகள், இல்லங்களில் கொண்டாடப்பட வேண்டும். பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு நன்றி, வரவிருக்கும் தூய்மையான வெற்றிக்கு வரம், நனைந்த இமைகளோடு ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என, அவர் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்