- Advertisement -
Homeபொழுதுபோக்குமத்தவங்களை கிண்டல் பண்ணினா அதுக்கு பேர் காமெடியா? வில்லன் நடிகர் பசுபதி எழுப்பிய கேள்வி -...

மத்தவங்களை கிண்டல் பண்ணினா அதுக்கு பேர் காமெடியா? வில்லன் நடிகர் பசுபதி எழுப்பிய கேள்வி – கவுண்டமணி, சந்தானத்தை தான் சொல்கிறாரா?

- Advertisement -

மத்திய சென்னைதான் நம்ம கோட்டை பட்டாசு பாலு தான் என் பேரு இங்க நான் பேச மாட்டேன். பட்டாசு தான் பேசும் என்ற வசனத்துடன் திருப்பாச்சி படத்தில் கொடூர வில்லனாக ரசிகர்களை மிரட்டியவர் நடிகர் பசுபதி. பிறகு தூள் படத்தில் சொர்ணக்காக தம்பியாக வந்து நடிகர் விக்ரமிடம் அடிவாங்குவார்.

பிறகு மஜா படத்தில் நடிகர் விக்ரமுக்கு பாசக்கார தம்பியாகவும் பல காட்சிகளில் காமெடியாக நடித்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். விஜய் நடித்த மதுர விக்ரம் நடித்த அருள் குறிப்பாக கமல் நடித்த விருமாண்டி போன்ற பல படங்களில் வில்லன் கேரக்டர்களில் பசுபதி ஒரு தரமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதே நேரத்தில் விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் படத்தில், கிராமத்து பஞ்சாயத்து தலைவராக காமெடி நடிப்பில் பசுபதி நடிப்பு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படத்திலும் பல காட்சிகளில் பசுபதி காமெடி நடிப்பில் அசத்தி இருந்தார். வெடிகுண்டு முருகேசன் படத்தில் காமெடி நடிப்பை தந்திருந்தார்.

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுக்கு வாத்தியாராக வந்த பசுபதி நடிப்பு வேற லெவலில் இருந்தது. எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் அதில் தனது நடிப்பில் தனி முத்திரை பதித்து விடுகிறார். குறிப்பாக வெயில் ஈ போன்ற படங்களில் பசுபதி நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம்.

- Advertisement -

ஆனால் பல படங்களில் காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்களை பேசுவது, உடல் ஊனங்களை உடலில் உள்ள குறைபாடுகளை மையப்படுத்தி கிண்டல் செய்வது காமெடி காட்சிகளாக வைக்கப்படுகிறது. இயல்பான காமெடி என்பதே மாறிப்போய், காமெடி காட்சிகள் வலிய திணிக்கப்படுவது போன்ற உணர்வே ரசிகர்களுக்கு ஏற்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பசுபதி இன்றைய சினிமாவில் காமெடி குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து நடிகர் பசுபதி கூறியதாவது, அடுத்தவர்களை அசிங்கப்படுத்தி அதுதான் காமெடின்னு சொன்னா அதை ஒத்துக்க முடியாது. உடல் ஊனத்தை வைத்து கிண்டல் பண்றது காமெடி கிடையாது. அதை நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். யாரையும் புண்படுத்தாமல் பண்ணனும் அதுதான் அழகு, அதுதான் காமெடி என்று நடிகர் பசுபதி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்