- Advertisement -
Homeபொழுதுபோக்குபணத்துக்காக தனது படைப்புக்கு துரோகம் செய்பவர் அல்ல அமீர், இந்த திமிருத்தனம் எல்லாம் இங்க வேண்டாம்...

பணத்துக்காக தனது படைப்புக்கு துரோகம் செய்பவர் அல்ல அமீர், இந்த திமிருத்தனம் எல்லாம் இங்க வேண்டாம் – ஞானவேல் ராஜாவை எச்சரித்த நடிகர் பொன்வண்ணன்

- Advertisement -

பருத்திவீரன் படம் தயாரிப்பு குறித்த பிரச்னையில், பல உண்மைகள் வெளிவர துவங்கியிருக்கின்றன. தனது நண்பர்கள், உறவினர்கள் என பல பேரிடம் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி இந்த படப்பிடிப்பை அமீர் முடித்திருக்கிறார் என்பது, இயக்குநர் சமுத்திரக்கனி வெளியிட்ட பதிவில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதே போல், படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்கான செலவுக்கான மொத்த தொகையை நான்தான் அமீர் அண்ணனுக்கு கடனாக கொடுத்தேன் என, இயக்குநர், நடிகர் சசிக்குமார் உறுதியாக தெரிவித்திருக்கிறார். என் தம்பி சசிக்குமார் பணம் கொடுத்தது உண்மை என்று சமுத்திரக்கனியும் அதை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில், பருத்திவீரன் படத்தில் முக்கிய கேரக்டரில், கதாநாயகி பிரியாமணியின் தந்தையாக நடித்த நடிகர், இயக்குநர் பொன்வண்ணன், பருத்திவீரன் படப்பிடிப்பில் நடந்தது குறித்து பல உண்மைகளை கூறியிருக்கிறார். அதில் ஞானவேல் ராஜாவுக்கு மிக கடுமையாக தனது கண்டனங்களையும் பொன்வண்ணன் பதிவு செய்திருக்கிறார்.

பொன்வண்ணன் கூறியதாவது, பருத்திவீரன் படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்புகள் துவங்கிய போது, அமீர் அவர்களே பொறுப்பேற்று பல நண்பர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார். இதையெல்லாம் நான் அறிவேன். நானும் சமுத்திரக்கனியும் செலவுகளை சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம், அமீர் எங்களை சமாதானப்படுத்துவார்.

- Advertisement -

பணத்துக்காக தனது படைப்புக்கு துரோகம் செய்பவர் அல்ல அமீர். இதெல்லாம் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஒரு நல்ல படைப்பாளியை தன்னுடைய தனிப்பட்ட காரணத்துக்காக திருடன், வேலை தெரியாதவன் என்று கொச்சைப்படுத்துவது சரியல்ல.

சமீபத்தில் ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில் உடல்மொழியும் பேச்சும் திமிருத்தனமாக இருந்தது. அதுவும் இவருடைய தயாரிப்பில் வந்த இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்தி வீரனையும், அந்த படைப்பாளியையும் எடைபோட்டு வீட்டீர்களோ இந்த தரம் தாழ்ந்த மனநிலை வேண்டாம் என்று, தனது கண்டன பதிவில் பொன்வண்ணன் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்