- Advertisement -
Homeபொழுதுபோக்குடிராகன் படத்துல நீங்க பார்த்த சில சம்பவம், என் நிஜ வாழ்க்கையில் நடந்துருக்கு… - ...

டிராகன் படத்துல நீங்க பார்த்த சில சம்பவம், என் நிஜ வாழ்க்கையில் நடந்துருக்கு… – உண்மையை போட்டுடைத்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்!

- Advertisement -

சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற படம் டிராகன். லவ் டுடே படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்த 2வது படம். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் இயக்கத்தில் உருவான இந்த படம் 6 நாட்களில் ரூ. 75 கோடி வசூலை கடந்துள்ளது. வரும் நாட்களில் ரூ. 100 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிராகன் படத்தில் கல்லூரி மாணவராக அடாவடி செய்யும் ஹீரோவாக நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். 48 அரியர் வைத்திருக்கும் அவர், நண்பர்கள் அறையில் தங்கிக்கொண்டு வேலைக்கு செல்வதாக கூறி பெற்றோரை ஏமாற்றிக் கொண்டு இருப்பார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவர், தனது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதுகுறித்து பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, கோமாளி படம் எடுக்கற வரைக்கும் நான் வேலையை விட்ட விஷயத்தை வீட்டில் சொல்லலை. அந்த காலகட்டத்தில் ஒன்றரை வருஷம் காசு எல்லாம் நிறைய சேர்த்து வெச்சுக்கிட்டேன். ரொம்பவும் கஞ்சமாக இருப்பேன். நானே சாப்பிட மாட்டேன். அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு பணம் எனக்கு தேவை என்பதால் ரொம்ப சிக்கனமாக இருந்தேன். அதனால் வீட்டில் வேலைக்கு போறதா நம்ப வெச்சுக்கிட்டு இருந்தேன்.

வீட்டில் வேலைக்கு போறதா சொல்லிக்கிட்டு பிரண்ட் வீட்டுக்கு போயிடுவேன். நிறைய நாள் பார்க்கில் போய் உட்கார்ந்து விடுவேன்.இது ரொம்பவும் சிரமமாக இருந்தது. அதனால் வீட்டில் நைட் ஷிப்ட் என்று சொல்லிவிட்டேன். அதனால் காலையில் நான் ரூமில் தூங்குவதாக நினைத்து கொள்வார்கள். நான் எதையாவது அப்போது எழுதிக் கொண்டு இருப்பேன்.

இரவில் 8 மணிக்கு டிபஜ் சாப்பிட்டுவிட்டு என் அப்பா படுத்து தூங்கி விடுவார். அதனால் நான் வேலைக்கு போயிருவேன்னு அவங்க நினைச்சுடுவாங்க. ஒர்க் பிரம் ஹோம் பா என்று அப்பாவிடம் அப்போது சொல்லிடுவேன். ஆனால் நியூஸ் பேப்பரில் என்னை பற்றிய செய்திகளை பிறகு பார்த்த போது ரொம்பவும் அப்பா அம்மா சந்தோஷப்பட்டார்கள்.

கோமாளி படம் 100 நாள் ஓடியதற்கு நான் முதல்வரிடம் ஷீல்டு வாங்கிய போது என் பெற்றோர் ரொம்பவும் சந்தோஷப்பட்டார்கள். அந்த செய்தி பேப்பரில் வெளியானது. என் அப்பா சொந்தமாக ஜெராக்ஸ் கடை வைத்திருந்தார். அதனால் ஐஏஎஸ் போன்ற பெரிய படிப்புதான் அவர்களுக்கு பெரிதாக பட்டது. நான் டைரக்டர் என்பதை பெரிதாக நினைக்கவில்லை என்று அந்த நேர்காணலில் பிரதீப் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

சற்று முன்