- Advertisement -
Homeபொழுதுபோக்குதள்ளிப்போகும் அமரன் பட ரிலீஸ் தேதி... போஸ்டர் வெளியிட்டு புது தேதியை அறிவித்த படக்குழு... ஒரே...

தள்ளிப்போகும் அமரன் பட ரிலீஸ் தேதி… போஸ்டர் வெளியிட்டு புது தேதியை அறிவித்த படக்குழு… ஒரே மாதத்தில் இத்தனை படங்களா எல்லாம் மோத போகுதா?…

- Advertisement -

மாவீரன் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உடன் இணைந்தார். ராஜ்குமார் பெரியசாமி ஏற்கனவே கௌதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் என்னும் திரைப்படத்தை எடுத்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக கொண்டாடப்படவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது.

 

- Advertisement -

இப்படியான சூழலில், இயக்குனருடன் சிவகார்த்திகேயன் கைகோர்த்த நிலையில் அவர்களைத் தோள்மேல் உயர்த்தி வைத்தார் கமல்ஹாசன். தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அவர் அறிவித்தார். படத்தில் கதாநாயகியாக, சாய் பல்லவியும் நுழைந்தார்.

 

- Advertisement -

இந்த படத்திற்காக கச்சிதமான உடல் கட்டமைப்பு மற்றும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெறுவதற்காக மும்பைக்கு சென்றார் சிவகார்த்திகேயன். ராணுவ வீரர் கதாபாத்திரம் என்பதால், அதற்கேற்ற உடல்வாகுடன் காட்சியளித்தார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து காஷ்மீர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

 

இடையே சூட்டிங்கை ராஜ்குமார் பெரியசாமி தாமதப்படுத்துவதாகவும் ஒரு பேச்சு எழுந்தது. இப்படியான சூழலில் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. அதில் காமெடியை எல்லாம் ஒரு ஓரத்தில் மூட்டை கட்டி வைத்துவிட்டு முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவின் சிவகார்த்திகேயன் பணியாற்றியது கண்கூட தெரிந்தது.

 

கனீர் குரலில் அவர் பேசிய வசனங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தின. சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை தான் இந்த திரைப்படம் பிரதிபலிப்பாக கூறப்படுகிறது. பணி காலத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பின்புலமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு முகுந்தன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

படத்திற்கு அமரன் என டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், அதன் பணிகளை முடித்துவிட்டு ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் சென்று விட்டார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அமரன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. தற்போது அதன் வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்துள்ளனர். அதன்படி, அக்டோபர் 31ம் தேதியான தீபாவளி பண்டிகையன்று படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அக்டோபர் 10 ஆம் தேதி, சூர்யாவின் கங்குவா மற்றும் ரஜினிகாந்தின் வேட்டையன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. தற்போது அக்டோபர் மாதத்திற்கான ரேஸில் அமரனும் கலந்து கொண்டுள்ளது.

 

- Advertisement -

சற்று முன்